ஜப்பான் நாட்டை தொடர்ந்து மியான்மரிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
ஜப்பான் நாட்டை தொடர்ந்து மியான்மரிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
ஜப்பானில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்ம் பதிவானது. டோக்கியோவில் 5.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் காயம் அடைந்தோர் எண்ணிக்கையாது 32 ஆக உள்ளது. அதில் 5 பேர் நிலைமை உயிருக்கு ஆபததான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில் ஜப்பானை தொடர்ந்து மியான்மரிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டரில் 5.5 அலகாக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இந்த காட்சிகள் இணையதளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் நிலநடுக்கம் அதன் பாதிப்பு, உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. சுனாமி ஆபத்து குறித்த எச்சரிக்கையும் அறிவிக்கப்படவில்லை.