இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு….! மூன்று நாடுகளின் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு..!

By manimegalai aFirst Published Oct 5, 2021, 5:48 PM IST
Highlights

புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்ததாக கணித்ததற்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்ததாக கணித்ததற்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

 

மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் வழங்கப்படும் நிலையில், மற்ற பரிசுகள் ஸ்வீடனில் வழங்கப்படுகிறது.

2021-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளான ஆர்டெம், ராபர்ட் லூயிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்தநிலையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே மற்றும் ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன் ஆகியோருக்கு பூமியின் காலநிலை இயற்பியல் மாதிரிக்காகவும், புவி வெப்பமடைதலின் மாறுபாட்டை அளவிட்டு நம்பத்தகுந்த வகையில் கணித்ததற்காகவும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஜார்ஜியோவின் பாரிசிக்கு, உடல் கோளாறுகள் மற்றும் ஏற்ற இரக்கங்களின் வேறுபாடுகளை கண்டறிந்தற்காக வழங்கப்பட்டுள்ளது.

click me!