பலுசிஸ்தான் அரசியல் தலைவர் கொலை வழக்‍கு : பர்வேஷ் முஷரப்புக்‍கு பிடிவாரண்ட்!

 
Published : Nov 29, 2016, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
பலுசிஸ்தான் அரசியல் தலைவர் கொலை வழக்‍கு : பர்வேஷ் முஷரப்புக்‍கு பிடிவாரண்ட்!

சுருக்கம்

பலுசிஸ்தான் அரசியல் தலைவர் கொலை வழக்‍கில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் Pervez Musharraf-க்‍கு, பலுசிஸ்தான் உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் Pervez Musharraf கடந்த 2008-ம் ஆண்டு பதவி விலகியபோது நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது துபாயில் வசிக்‍கும் அவர், பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்தபோது கடந்த 2006-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பில் உள்ள பலுசிஸ்தான் தேசிய கட்சித் தலைவர் Nawab Akbar Khan Bugti, மாகாண சுயாட்சி கோரி தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

அப்போது, Musharraf உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்‍கையில் Nawab Akbar Khan Bugti கொல்லப்பட்டார். இதுதொடர்பான வழக்‍கு பலுசிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் Musharraf நேரில் ஆஜராகவில்லை. 

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்‍காக நேரில் ஆஜராவதிலிருந்து விலக்‍குக்‍ கோரி கடந்த மார்ச் மாதம் Musharraf தாக்‍கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் கொண்ட அமர்வு Musharraf பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

துருக்கியில் விமான விபத்து: லிபியா ராணுவத் தளபதி உள்பட 5 பேர் மரணம்!
இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!