“கொலம்பியா விமானம் விபத்து” – இதுவரை 25 உடல்கள் மீட்பு..!!

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 03:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
“கொலம்பியா விமானம் விபத்து” – இதுவரை 25 உடல்கள் மீட்பு..!!

சுருக்கம்

பொலியாவில் இருந்து இன்று காலை விமானம் ஒன்று கொலம்பியாவின் மெடிலின் விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றது.

இதில், சாபேகோயின்ஸ் கால்பந்து அணி வீரர்கள் உள்ளிட்ட 72 பேருடன் விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்த விமானம் மெடிலின் நகரை நெருங்கி சென்று கொண்டிருந்தபோது, திடீரென விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்  பிரேசில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 72பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

இனி மாதத்திற்கு இருமுறை சம்பளம்..! பணப்புழக்கத்தை அதிகரிக்க அரசின் ஸ்மார்ட் மூவ்..
60 ஆயிரம் விஷ பாம்புகளை வளர்த்து கோடீஸ்வரியான 30 வயது பெண்... இது எங்க?