முன்னாள் விடுதலைப்புலி தளபதி கருணா திடீர் கைது

First Published Nov 29, 2016, 2:40 PM IST
Highlights


விடுதலைப்புலிகள் இயக்க தளபதி கருணா ராஜபக்‌ஷே அரசில் அமைச்சராக இருந்த போது ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு , அவர்கள் வாழ்க்கை உரிமைகள் பறிக்கப்பட்டதால் கிளர்ந்தெழுந்த தமிழர்கள் போராடினர். இலங்கை தமிழர்களின் முக்கிய இயக்கமாக விடுதலை புலிகள் அமைப்பு இலங்கை அரசுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியது. 

இதன் தலைவர் பிரபாகரனும் போர் குணமிக்க பல தளபதிகளும் இருந்தனர். இதில் முக்கிய தளபதியாக பிரபாகரனுக்கு நெருக்கமாக இருந்தவர்  வினாயகமூர்த்தி முரளிதரன் என்கிற கருணா. விடுதலை புலிகள் கிழக்கு பகுதி இயக்க தளபதியாக முக்கிய இடத்தில் இருந்த கருணா திடீரென 2004 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறினார். பின்னர் தனி இயக்கத்தை தொடங்கிய அவர் அதை அரசியல் கட்சியாக மாற்றினார்.

அதன் பின்னர் ராஜபக்‌ஷேவுடன் இணைந்து அரசியல் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு ராஜபக்‌ஷே அரசில் தேசிய ஒருமைப்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அவரது தலைமையின் கீழ் செயல்படும் ‘தமிழ்மக்கள் விடுதலைபுலிகள்’ என்கிற அமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சி பொறுப்பில் இருந்தது. 

2009 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்து விடுதலைபுலிகளுக்கு எதிராக பல முக்கிய தகவல்களை அளித்து துரோகச்செயலில் ஈடுபட்டார் கருணா. 

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தேர்தலில் ராஜபக்‌ஷே தோல்வியுற்று சிரிசேனா பதவி ஏற்றார். அதன் பின்னர் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல் , முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் ராஜபக்‌ஷேவின் மகன் , தம்பி கைது செய்யப்பட்டனர். 

ராஜபக்‌ஷேவின் மீதும் குற்றச்சாடு உள்ளது. இந்நிலையில் அமைச்சராக இருந்த கருணா நிதி மோசடி புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவர் மீது வாகனம் வாங்கியதில் ரூ.4 கோடி அளவில் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது . இந்நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கர்ணாவை விசாரணைக்கு பின்னர் நிதி மோசடி புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

2004–ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடைத்து கருணா வெளியேறினார். 

அதை தொடர்ந்து ஆளும் ராஜபக்சே கட்சியுடன் கூட்டணி அமைத்து தற்போது துணை மந்திரி பதவி வகிக்கிறார். ஏற்கனவே இலங்கை சுதந்திரா கட்சியின் துணை தலைவராகவும் இவர் இருந்தார்.

விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்குரிய போர்படை தளபதியாக இருந்த கருணா அம்மன் 2004 ஆம் ஆண்டு விடுதலைபுலிகளிடமிருந்து பிரிந்து இலங்கை அரசிற்கு துணை போனார்.

click me!