கொலைகார சீனா... கொரோனா வைரஸின் வெளிவராத மர்மங்கள்... புட்டுப்புட்டு வைக்கும் கிரிமியியல் விஞ்ஞானி..!

By Thiraviaraj RM  |  First Published Sep 14, 2020, 2:21 PM IST

சீன அரசு கொரோனா வைரஸை திட்டமிட்டு உருவாக்கியதாக அந்த நாட்டின் கிரிமியியல் விஞ்ஞானி லீ மெங் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
 


சீன அரசு கொரோனா வைரஸை திட்டமிட்டு உருவாக்கியதாக அந்த நாட்டின் கிரிமியியல் விஞ்ஞானி லீ மெங் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 வைராலஜி நிபுணராக பணியாற்றிய டாக்டர். லீ மெங், கொரோனா வைரஸ் பரவ சீன அரசே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். தற்போது, அமெரிக்காவில் தலைமறைவாக உள்ள அவர் கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி அடையாளம் தெரியாத பகுதியில் இருந்து பிரிட்டனின் 'லூஸ் வுமன்' என்ற நிகழ்ச்சிக்காக பேட்டியளித்தார். அப்போது, அவர் பல அதிர்ச்சிக்கரமான தகவல்களை தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

"கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் சீனாவில் பரவி வந்த புதிய வகையிலான நிமோனியா குறித்து இரண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். ஆய்வின் மோசமான முடிவுகள் குறித்து எனது மேலதிகாரியிடம் பகிர்ந்து கொண்டேன். அந்த மேலதிகாரி உலக சுகாதார மையத்தில் கன்சல்ட்டன்டாக இருப்பவர். அவரிடத்தில் 'சீன அரசு சார்பாகவும் உலக சுகாதார மையத்தின் சார்பாகவும் தகுந்த நடவடிக்கை எடுங்கள்' என்றேன். ஆனால், அவரோ , 'உன் வாயை பொத்திக் கொண்டு இரு. இல்லையென்றால் காணாமல் போய் விடுவாய்' என்று என்னை மிரட்டினார்.

அந்த சமயத்தில் சீன புத்தாண்டு விடுமுறை தொடங்கியது. உலகமெங்கும் சீன மக்கள் பயணம் மேற்கொள்வார்கள். இதனால், உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயமும் இருந்தது. ஏனென்றால், இது மிகவும் மோசமான ஒரு வைரஸ். உலக சுகாதாரத்தையே புரட்டி போட்டு விடும் திறமை கொண்டதாக இருந்தது. அதனால், என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. அப்படி, நான் அமைதியாக இருந்தால் உலக மக்களுக்கு தீங்கிழைத்தற்கு சமமாகும். இந்த நிலையில், சீனாவிலிருந்து தப்பி நண்பர்களுடன் ஹாங்காங் வந்தேன். மிரட்டல்கள் வந்ததையடுதது அமெரிக்காவில் தஞ்சமடைந்தேன்.

ஊகானில் உள்ள அசைவ சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் உருவானது இல்லை. சீனா மிலிட்டரி இன்ஸ்டிடியூட்டால் வௌவாலில் இருந்து உருவாக்கப்பட்டு ஆய்வக மாற்றத்துக்கு பிறகு கொரோனா வைரஸாக மாற்றப்பட்டது. CC45 மற்றும் ZXC41 என்றே இதற்கு பெயரிடப்பட்டிருந்தது. ஜனவரி 17-ஆம் தேதி அமேரிக்காவில் வாழும் சீனாவை சேர்ந்த யூடியூப்பர் ஒருவரை தொடர்பு கொண்டு, சீன அரசு கோவிட்-19 வைரஸை உருவாக்கியது குறித்து தகவல் தெரிவித்தேன். மனிதரிடத்தில் மனிதருக்கு பரவும் என்பது சீனாவுக்கு தெரியும். கொரோனா வைரஸ் அதி தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும். உலகம் முழுக்க பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஊகான் கடல் உணவு சந்தை வைரஸை பரப்புவதற்கான ஒரு களம் மட்டுமே போன்ற விஷயங்களை அவரிடத்தில் விளக்கி கூறினேன்.

தற்போது, ஊகானில் வைரஸ் உருவாக்கப்பட்ட விதம், பரவிய விதம் குறித்து இரண்டு அறிக்கைகள் எங்களிடத்தில் உள்ளன, அந்த அறிக்கைகள் ஊகானில் வைரஸ் உருவாக்கப்பட்டற்கான அறிவியல் சான்றுகளைப் பற்றி மக்களுக்குச் சொல்லும். உயிரியலில் எந்த அடிப்படை அறிவும் இல்லாதவர்கள் கூட கொரோனா வைரஸ் உருவத்தை வைத்தே உண்மையை அறிந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

ஊகான் வைரலாஜி ஆய்வு மையத்தில்தான், கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ள நிலையில், லீ மெங் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், லீ மெங்கின் குற்றச்சாட்டை ஏற்கெனவே சீனா மறுத்துள்ளது

click me!