பிக்பாஸ் வீட்டுக்குள், ஒரு நாள் இருந்தா 7.6 லட்சம் பணம்.! அடேங்கப்பா..! வேற லெவல்.!!

By Raghupati R  |  First Published Apr 26, 2022, 10:17 AM IST

ஜிம்மி டோனால்ட்சன், மிஸ்டர்பீஸ்ட் என்ற பெயரில் யுடியூப்பில் பிரபலமானவர். ரசிகர்களை பரிசு பொருட்களை வழங்கி மகிழ்விப்பதினாலும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதினாலும் இவருக்கு ரசிகர் பட்டாளம் பெரியதாக இருக்கிறது.


வீடியோ பகிர்வு தளத்தின் பிளந்த்ரோபிஸ்ட் என்று கூறப்படும் மிஸ்டர் பீஸ்ட், "மிஸ்டர் பீஸ்ட் சேலஞ்சில்" ஒரு ரசிகருக்கு 1 மில்லியன் சந்தாதாரர்களை வழங்கியபோது அனைவராலும் கவனம் ஈர்க்கப்பட்டார். ஜிம்மி டோனால்ட்சனின் இவ்வாறான மேலதிக வினோதங்களின் பட்டியல் முடிவற்றது. ஒரு டீலர் ஷோரூமில் இருந்து அனைத்து கார்களையும் வாங்குவது, பணியாளர்களுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை டிப்ஸ் கொடுப்பது, அனைத்து நாய்களையும் ஒரு தங்குமிடத்தில் இருந்து தத்தெடுப்பது, அந்நியர்களுக்கு ஒரு இலவச வங்கியைத் திறப்பது, 20 மில்லியன் மரங்களை நடவு செய்வது என இவரது ரசிகர்களை கவரும் செயல்கள் ஏராளம்.

Tap to resize

Latest Videos

இப்படிதான், ஒருமுறை மிஸ்டர்பீஸ்ட் ரூ.5 கோடி மதிப்புள்ள ஒரு தீவை வாங்கி ஒரு வேடிக்கையான தீவு சவாலில் ஒரு நண்பருக்கு கொடுக்க முடிவு செய்தபோது சில விஷயங்கள் வினோதமாகிவிட்டது. யூடியூபில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய அடையாளத்தைத் தொட்டதால் தனது சந்தாதாரர்களுக்கு பரிசளிக்கும் பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து வந்த மிஸ்டர்பீஸ்ட் 40 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களை பெற்றதால் 40 மில்லியானவது சந்தாதாரருக்கு 40 கார்களை வழங்கியுள்ளார்.

 இந்நிலையல் இவர் சமீபத்தில் தன் சேனலில் வழக்கம் போல ஒரு போட்டி ஒன்றை அறிவித்தார். அதில் அவர் தமிழில் பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி போல ஒருவர் ஒரே ரூமில் 100 நாட்கள் தங்க வேண்டும் என இந்த போட்டிக்கு சில விதிமுறைகளை வகுத்திருந்தார். அதில் வசதிகளும் இருக்கும். ஆனால், ஒரு ஜன்னல் கூட இருக்காது. இந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு 10000 அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ7.6 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த போட்டிக்கு ஜோஷ் என்பவர் போட்டியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். வீடியோ எடிட்டராக பணியாற்றி வரும் அவர் அந்த வீட்டிற்குள் தங்கியிருந்த வீடியோ தற்போது யூடியூபில் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ஏப்ரல் 9ம் தேதி வெளியான நிலையில் பலர் இந்த வீடியோவை வைரலாக பகிர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட3.8 கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துளு்ளனர். அவர் அந்த வீட்டில் 21 நாட்கள் தங்கியிருந்து 3.4 லட்சம் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ2.5 கோடி பணம் சம்பாதித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : PUBG Madan : பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் ரத்து.! சென்னை ஐகோர்ட் உத்தரவு !!

click me!