அதிபர் மைத்ரிபால் சிறீசேனா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைந்ததை ஏற்றுக் கொள்ளாத ராஜபக்ஷே ஆதரவு எம்.பி.க்கலும், எதிர்க்கட்சியினரும் மோதிக் கொண்டதில் கைகலப்பு ஏற்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் பதவியைப் பறித்துவிட்டு அவருக்குப் பதிலாக ராஜபக்ஷேயை பிரதமராக அதிபர் சிறீசேனா திடீரென அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் வழக்கு தொடர்ந்ததால் அதிபரின் அறிவிப்புக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையடுத்து சிறீசேனா மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியதும் தீர்மானத்தை ஏற்கமுடியாது எனக் கூறி அவைக்குள் ராஜபக்ஷேயின் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் திரண்டு வந்து பதிலுக்கு கோஷமிட்டனர்.
இதனால் காரசாரமாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்த இருதரப்பினரும் திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் பதற்றம் நிலவியது. நிலைமையை கட்டுக்குக் கொண்டு வரமுடியாததால் அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அங்கிருந்து வெளியேறினார்.