ஏற்கனவே 9 குழந்தைகள்.. ஆனா இது போதாது.. நினைத்தது நடக்கும் வரை ஓயமாட்டேன் என கூறும் பெண் - ஏன் தெரியுமா?

By Ansgar R  |  First Published Aug 26, 2023, 1:42 PM IST

இந்த கால சூழ்நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரு குழந்தையை பெற்று வளர்ப்பது பெரும் சிரமமாக இருக்கும் நிலையில், சீனாவை சேர்ந்த ஒரு பெண் ஏற்கனவே ஒன்பது குழந்தைகளை பெற்றுள்ள நிலையில், இன்னும் அதிக அளவிலான குழந்தைகளுக்கு பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.


சீனாவை சேர்ந்த அந்த பெண், திருமணமாகி கடந்த 13 ஆண்டுகளில் 9 குழந்தைகளை பெற்றுள்ள நிலையில் இன்னும் அதிக அளவில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த பெண்ணுக்கு இப்பொழுது 31 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண் தனது கணவரின் ஜீன்களை வீணாக்க விரும்பவில்லை என்றும் ஆகவே 12 சீன ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

Tian dongxia என்ற அந்தப் பெண் சோகோ என்பவரை அவருக்கு 16 வயது இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு அந்த தம்பதியினருக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. இது சீன நாளேட்டின்படி புலியின் வருடமாக கருதப்படுகிறது. அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன, 2012ம் ஆண்டு என்பது டிராகனுக்கான வருடமாகும்.

பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்கள்.. பங்கேற்க தகுதி பெற்றார் சிங்கப்பூர் வீராங்கனை சாந்தி - புதிய சாதனை!

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக குழந்தைகளை பெற்றுக்கொள்ள பெரிய அளவில் நாட்டம் காட்டாத அந்த தம்பதிகள், கடந்த 2016ம் ஆண்டு சீன நாளேடின்படி வெள்ளாடு (Goat) வருடத்தில் அவர்களுக்கு நான்காவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் தான் 12 சீன ஆண்டின் படி குழந்தைகளை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் தோன்றியுள்ளது. 

அதன் பிறகு தான் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அந்த தம்பதிக்கு 5 குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மீண்டும் புலியின் ஆண்டு வந்துள்ள நிலையில் அவர் தனது ஒன்பதாவது குழந்தைக்கு தாயாகியுள்ளார். 

தற்பொழுது அவர் பத்து மாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே புலி, டிராகன், குரங்கு சேவல், நாய், பன்றி மற்றும் எலி ஆகிய மிருகங்களை குறிக்கும் சீன ஆண்டுகளில் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், இன்னும் எருது, முயல், பாம்பு, குதிரை மற்றும் ஆடு ஆண்டுகளுக்கு தனக்கு குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று அவர் ஆசை கொண்டுள்ளார். 

ஆகவே இவை அனைத்தும் நிறைவேறும் வரை தான் தொடர்ச்சியாக குழந்தைகளை பெற விரும்புவதாக அவர் தெரிந்துள்ளார். அவருடைய கணக்கின்படி அவர் 12 ஆண்டுகளுக்கும் குழந்தைகளை பெற சுமார் 2033ம் ஆண்டு வரை பிடிக்கும் என்றும் அப்பொழுது அவர், அவரது 40 ஆவது வயதில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நடைபெறவிருக்கு F1 Night Race-காக மூடப்படும் சாலைகள்! மாற்று பாதை விரைவில் அறிக்கப்படும்!

click me!