உலகின் மிக விலை உயர்ந்த ஐந்து விஷயங்கள் பற்றி இங்கு காணலாம்
பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது, இல்லையா? இருப்பினும், நீங்கள் விரும்பும் எதையும், எப்போது வேண்டுமானாலும், உங்களால் வாங்க முடியுமா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாமல், நீங்கள் விரும்பும் எதையும் வாங்குவதற்கு போதுமான பணம் உங்களிடம் இருக்க வேண்டாமா? இதனை கோடீஸ்வரர்களால்தான் சாத்தியமாக்க முடியும். மற்றவர்கள் அந்த நிலைக்கு உயர முயற்சிக்கலாம்.
அதேசமயம், உலகின் மிக விலையுயர்ந்த விஷயங்கள் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். அதுபற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
சர்வதேச விண்வெளி நிலையம் - 150 பில்லியன் டாலர்
இதுவரை கட்டப்பட்ட மிக விலையுயர்ந்த விஷயம் என்னவென்று கேட்டால், உடனடியாக புர்ஜ் கலீஃபா, தாஜ்மஹால் போன்றவற்றை நோக்கி நமது மனது திரும்பும். ஆனால், அது எதுவுமே உண்மையில்லை. கின்னஸ் புத்தகத்தின் படி, வளர்ச்சி மற்றும் கட்டுமான செலவுகள் என்று வரும்போது, சர்வதேச விண்வெளி நிலையம் 150 பில்லியன் டாலர் மதிப்பில் முதலிடத்தில் உள்ளது. அதுதவிர, இதனை செயல்படுத்துவதற்கு நாசாவிற்கு ஆண்டுக்கு 4 பில்லியன் டாலர் செலவாகும்.
ஹிஸ்டரி சுப்ரீம் யாட்ச் - 4.8 பில்லியன் டாலர்
நாம் சில ஆடம்பரமான படகுகளைப் பார்த்திருப்போம். ஆனால், ஹிஸ்டரி சுப்ரீம் யாட்ச் உடன் அவற்றை ஒப்பிட முடியாது. பிரிட்டிஷ் ஆடம்பர கேஜெட் டீலர் ஸ்டூவர்ட் ஹியூஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்ட இது, பிளாட்டின முலாம் பூசப்பட்டு தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த படகை ஷங்ரி-லா ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸின் நிறுவனர் ராபர்ட் கோக் வாங்கியதாக கூறப்படுகிறது. உலகிலேயே சிறந்ததாகக் கருதப்படும் என்ஜின் இந்தப் படகில் உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட அறைகள் இதில் உள்ளன. உங்களது கற்பனைக்கு எட்டாத பல விஷயங்கள் படகில் உள்ளன. நீச்சல் குளங்கள், நடனத் தளங்கள், திரையரங்குகள், பார்கள் மற்றும் ஓய்வறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. டகின் உரிமையாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் படகில் ஏறலாம்.
ஹபிள் விண்வெளி தொலைநோக்கி - 2.1 பில்லியன் டாலர்
வயது மற்றும் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், இதுவரை உருவாக்கப்பட்ட விண்வெளி தொலைநோக்கிகளில் ஹபிள் விண்வெளி தொலைநோக்கி சிறந்த ஒன்றாகவே இருக்கிறது. பயன்பாட்டின் முடிவில் இருக்கும் ஒளியியல், 2.4-மீட்டர் ஹபிள் கண்ணாடி நவீன ஆராய்ச்சி தொலைநோக்கிகளுக்கு இணையாக உள்ளது. எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட இன்னும் பெரிய தொலைநோக்கிகளுக்கு இது முற்றிலும் மாறுபட்டது. இருப்பினும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியானது மிகவும் திறன் வாய்ந்தது.
ஆன்டிலியா மேன்ஷன் - 2 பில்லியன் டாலர்
உலகின் டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, மிகவும் விலையுயர்ந்த சில பொருட்களை வைத்திருப்பதில் புகழ்பெற்றவர். ஆடம்பரமான ஜெட் விமானங்கள் முதல் கார்கள் வரை, முகேஷ் அம்பானியின் பொருட்கள் விதிவிலக்கானவை. அந்த வரிசையில், அவரது ஆன்டிலியா வீடும் அடங்கும். மதிப்பின் அடிப்படையில், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்தபடியாக உள்ளது. மும்பையில் நிகரற்ற அடையாளமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டில், வேறு எந்த கட்டிடத்திலும் இல்லாத வசதிகள் உள்ளன. வீட்டின் வடிவமைப்பு சூரியன் மற்றும் தாமரை மலரை அடிப்படையாகக் கொண்டது. மென்மையான வெளிர் வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
105 காரட் கோஹினூர் வைரம் - 591 மில்லியன் டாலர்
கோஹினூர் வைரம் காலனித்துவ வெற்றியுடன் தொடர்புடைய பயங்கரமான கடந்த காலத்தைக் கொண்டுள்ளது. இந்த வைரம், இந்தியாவில் உள்ள வண்டல் படிவுகளிலிருந்து வெட்டப்பட்டது. இந்து நம்பிக்கையால் புனிதமானதாகவும் இது கருதப்படுகிறது. விக்டோரியா மகாராணிக்கு தனிப்பட்ட பொக்கிஷமாக வழங்கப்பட்டது. நாளடைவில் அரச குடும்பத்தின் முடிசுட்டு கிரீடங்களில் கோஹினூர் வைரம் இடம்பெற்றது. இதன் மதிப்பு 591 மில்லியன் டாலர் என மதிப்ப்டப்பட்டுள்ளது,