15,000 கொசுக்களுக்கு ரத்த தானம்! விபரீத ஆராய்ச்சியில் இறங்கியுள்ள 'கொசு மனிதன்'!

By SG BalanFirst Published Jun 10, 2024, 4:55 PM IST
Highlights

கொசு மனிதன் என்று அழைக்கப்படும் டாக்டர் பெர்ரான் ரோஸ் கொசுவின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறாராம்.

உயிரியல் நிபுணர் ஒருவர் தனது ரத்தத்தை கொசுக்களுக்கு தினமும் ஊட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தானாக முன்வந்து கொசுக்கள் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் கையை வைக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இந்த வினோத செயலில் ஈடுபடும் உயிரியலாளர் பெர்ரான் ராஸ் கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகக் கூறுகிறார். ஆராய்ச்சிக்காக கொசுக்களுக்கு யாராவது உணவளிக்க வேண்டும், அதை நானே செய்கிறேன் என்று அசால்ட்டாக சொல்கிறார் பெர்ரான்.

Latest Videos

அவரது வீடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் 60secdocs என்ற ஐடியில் பகிரப்பட்டுள்ளது. 60secdocs என்ற இன்ஸ்டா கணக்கில் ஒரு நிமிடத்திற்குள் முடியும் பல வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உலகம் முழுவதும் இருந்து பலரது கதைகள் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன.

சூரியனில் என்ன நடக்குது? ஆதித்யா எல்-1 எடுத்த புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 60 Second Docs (@60secdocs)

வீடியோவில், பெர்ரான் ரோஸ் தனது கையில் மெல்லிய கையுறையை வைத்து கொசுக்கள் நிரப்பப்பட்ட கண்ணாடி பெட்டிக்குள் கையை விடுகிறார். அவர் கையை நுழைத்தவுடன், கொசுக்கள் அவரது கையில் அமர்ந்து அவரது இரத்தத்தை உறிஞ்சத் தொடங்குகின்றன. அவர் தனது கையை வெளியே எடுக்கும்போது, அவரது கையில் ஏராளமான கொசுக்கடி தடங்கள் நிரம்பியுள்ளன.

கொசு மனிதன் என்று அழைக்கப்படும் டாக்டர் பெர்ரான் ரோஸ் இந்த விபரீத ஆராய்ச்சியை ஏன் செய்கிறார் என்பதையும் கூறியுள்ளார். கொசுவின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் ஆயுட்காலம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறாராம். இதற்காக தினமும் கொசுக் அடைக்கப்பட்ட பெட்டிக்குள் தனது கையை வைத்து பத்து வினாடிகள் கடிக்க வைக்கிறாராம். இதுவரை 15,000 கொசுக்கள் அவரைக் கடித்துள்ளதாவும் சொல்லப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதில் இருந்து, இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இன்ஸ்டா பயனர்கள் வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் வீடியோ குறித்து தங்கள் பலவிதமான கருத்துகளையும் பதிவு செய்துள்ளனர்.

30 நிமிடத்தில் இலவச தரிசனம்... ரூ.20-க்கு 2 லட்டு.. 'ஸ்பெஷல் ஸ்டாட்' ஒதுக்கிய திருப்பதி தேவஸ்தானம்!

click me!