
இன்றைய காலகட்டத்தில் தொலை தொடர்பு துறையின் அதிவேக முன்னேற்றத்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தாத ஆளே இல்லை என் நிலை உருவாகிவிட்டது.
காலை எழுந்ததும், பேஸ்புக்கில் வந்துள்ள பதிவுகள், வாட்ஸ்அப்பில் வந்த பதிவுகளை பார்க்கின்றனர். பின்னர், மற்ற செய்திகளை அறிந்து கொள்ள பல்வறு இணையதளத்தில் நுழைந்துவிடுகின்றனர். இதை தொடர்ந்து, செல்போனுக்கு ஓய்வு இல்லாமல் போகிறது.
அலுவலகம் சென்றாலும், நண்பர்களுடன் அரட்டை அடித்தாலும், ஒரு வார்த்தையாவது, செல்போன் பற்றியும், இணையதள வசதிகள், பல்வேறு செய்திகள் குறித்து பரிமாறி கொள்கின்றனர். மேலும், சில முகவரிகளை அறிந்து கொள்ள, MAP என்ற சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து, அதன்மூலம் பல தகவல்களை அறிந்து கொள்கின்றனர்.
குறிப்பாக இரவுநேரத்தில், நீண்ட நேரம் விழித்திருக்கும் அவர்கள், பேட்டரி சார்ஜ் குறைந்தவுடன், செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்குகின்றனர். இதனால், பெரும் விபரீதம் ஏற்படுவதை உணரவில்லை.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் வேல்ஸ் தீவில் உள்ள ஒரு வாலிபர், தனது செல்போனை இரவு முழுவதும் சார்ஜரில் போட்டு வைத்து இருந்தார். திடீரென உயர் அழுத்த மின்கசிவால், சார்ஜர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த வாலிபர் அலறியடித்து கொண்டு வெளியே ஓடினார்.
பின்னர், தண்ணீர் கொண்டு தீயை அணைக்க முயன்றார். ஆனால், முடியவில்லை. அதற்குள் கட்டில் மெத்தை முழுவதும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கு காயம் ஏற்படவில்லை.
எனவே, இரவு நேரத்தில் செல்போனுக்கு சார்ஜர் போடுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.