
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஓய்வுப்பெற்ற ராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் Michael Flynn-ஐ நியமிக்க Donald Trump முடிவு செய்துள்ளார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் Donald Trump வெற்றிபெற்றார். அடுத்த மாதம் 19-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் சபை கூட்டத்தில் இவர் முறைப்படி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ம் தேதி அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், தனது தலைமையிலான நிர்வாகத்தில் இடம்பெற வேண்டியவர்களை தேர்வு செய்வதில் Trump மும்முரமாக ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, முன்னாள் ராணுவ அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் Michael Flynn-ஐ நியமிக்க Trump முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ள Flynn, அதிபர் தேர்தலின்போது, தேசிய பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்து Trump-க்கு ஆலோசனைகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.