அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், தங்களின் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஜோடி ஒன்று மருத்துவமனைக்கு சென்றது. அழகான குழந்தையைப் பெற்றெடுத்த அந்த தாய்க்கு மட்டும் மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அந்த குழந்தையின் தந்தைக்கும்த்ன். கனவில் கூட நினைத்துப் பார்க்காத செயலை அந்த தந்தை செய்துள்ளார்.
தாய் ஏப்ரல் நியூபவுரின் பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு முன்-சினைப்பருவ வலிப்பு நோய் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் அவருக்கு உயர்ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. வலிப்பு காரணமாக ஏப்ரல், எமெர்ஜென்சி பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவருக்கு ரோசாலி என்ற அழகான மகள் பிறந்தாள். மீண்டும் அவருக்கு வலிப்பு ஏற்படவே அவரை காப்பாற்றும் பொருட்டு, குழந்தையைத் தாயுடன் நெருங்கவிடவில்லை. இதையடுத்து, ரோசாலி தந்தை மேக்ஸாமில்லியனிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டு விவாரங்கள் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழந்தையைக் கொண்டு வந்த நர்ஸ், குழந்தைக்கு தந்தையின் மார்பை சிறிது நேரம் கொடுக்க சொல்லியுள்ளார்.
இதன் பின்னர், ஒரு பிளாஸ்டிக் முலைக்காம்பு உறை ஒன்றை எடுத்து அதை குழாயுடன் இணைத்து ஊசி மற்றும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி அந்த பிளாஸ்டிக் முலைக்காம்பு உறையை மேக்மில்லனின் மார்பு காம்போடு பொருத்தினார். அதன் மூலம் குழந்தைக்கு பால் புகட்டப்பட்டது.
இது குறித்து மேக்மில்லன் கூறுகையில், நான் இதுவரை பால் தந்தது கிடையாது. ஒரு குழந்தைக்கு மார்பில் இருந்து பால் ஊட்டிய முதல் ஆண் நான்தான். எனது மாமியார் என்னைப் பார்த்தபோது என்ன நடக்கிறது என்பதை நம்பமுடியாமல் பார்த்தார். தாத்தாவுக்கு என்னிடம் சொல்ல எதுவுமில்லை என்றாலும் இறுதியில் என்னிடம் வந்து நின்றார்.
எனது குட்டி குழந்தையைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு பந்தம் உருவானது. குழந்தையைப் பிடித்து அவளுக்கு என் மார்பை கொடுத்தவுடன் அவளால் மார்பில் இருந்து பால் அருந்த முடியும் என்று நம்பினேன் என்று மேக்மில்லன் தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேக்மில்லனின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.