விடுதலை புலிகள் உருவாக வேண்டும் என கருத்து கூறிய அமைச்சர் ராஜினாமா...!

 |  First Published Jul 6, 2018, 4:12 PM IST
State Minister Vijayakala Maheswaran resigns



விடுதலை புலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பதவி விலகி விட்டதாக அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழர்கள் உயிருடன் வாழவும், எமது பிள்ளைகள் காப்பாற்றப்பட வேண்டுமானால் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு உருவாக வேண்டும் என்று பேசியிருந்தார். இதையடுத்து விஜயகலா தெரிவித்த கருத்து குறித்து சட்ட அமைச்சரின் கருத்தை பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்றத்தில் தெரிவித்த இலங்கையின் சபாநாயகர் , இது குறித்து விசாரணை நடத்துமாறு சட்ட அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதேபோல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. தனக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தவர்கள் என்ற உண்மையை கூறுவதால் தங்களை எவரும் பயங்கரவாதிகள் என கூறிவிட முடியாது என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் தெரிவித்திருந்தார். இந்த கருத்தும் இலங்கை சிங்களர்கள் மத்தியில் சர்ச்சையாகி உள்ளது. 

click me!