அமெரிக்காவை கதிகலங்க வாய்த்த மேத்யூ சூறாவளி - நூற்றுக்கணக்கானோர் பலி

Asianet News Tamil  
Published : Oct 08, 2016, 01:33 AM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
அமெரிக்காவை கதிகலங்க வாய்த்த மேத்யூ சூறாவளி - நூற்றுக்கணக்கானோர் பலி

சுருக்கம்

கரீபியன் தீவான ஹெட்டியில் மேத்யூ சூராவளியின் தாக்குதலால் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதை ஹெய்டியின் உள்துறை அமைச்சர் செய்தி ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ரோஷ்-அ-பெடூ நகரில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மிகவும் தொலைதூரப் பகுதிகள் மற்றும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து கிடைக்கும் படங்கள், அங்கு பேரழிவுகள் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெய்டியின் தென் கடலோரப் பகுதி முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளன என்று உள்துறை அமைச்சர் கூறுகிறார். அதிலும் குறிப்பாக ஒரு நகர் பகுதி ஒட்டுமொத்தமாக அழிந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஏராளமான வீடுகள் அழிந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனும் அச்சங்களும் எழுந்துள்ளன.

மிகவும் பலம் வாய்ந்த இச்சூராவளி இப்போது அமெரிக்காவின் ஃபுளோரிடா நோக்கி நகர்கிறது.

ஹேய்ட்டியை தாக்கிய சூறாவளி மேத்யூ, ஆயிரக்கணக்கானோரின் வீடுகளை சேதப்படுத்தி அவர்களை வீடற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. ஹைட்டியில் பல குடும்பங்கள் தற்போது தற்காலிக முகாம்களில் தங்குகின்றனர். அவர்களுக்கு உதவ முடியாமல் தொண்டு நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

கடந்த 2010ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தால் அந்த பகுதி மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் சூறாவளி காற்றால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பூமிக்குள் மறைந்திருக்கும் பிரம்மாண்ட கடல்… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!