பூமியைப் பதம் பார்க்க வரும் ஆபத்து... 65,000 கி.மீ. வேகத்தில் மோத வரும் கோள்! நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!

By SG BalanFirst Published Jul 7, 2024, 3:52 PM IST
Highlights

பூமியை நெருங்கி வரும்போது 2024 MT1 சிறுகோளை படம்பிடிக்கவும் நாசா தயாராகி வருகிறது. சிறுகோள்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

சுமார் 65,000 கி.மீ., வேகத்தில் வரும் சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாகவும் அது பூமியின் மீது மோதினால் குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்படும் என்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.

விண்வெளியில் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட கோள்களைப் போல, சிறிய அளவில் பாறைகளாக இருக்கும் விண்கற்களும் உள்ளன. இந்த விண்கற்கள் ஒரு சுற்றுவட்டப்பாதையில் இயங்கினால் அவை சிறுகோள் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறுகோள்களின் இயக்கத்தையும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

Latest Videos

இந்நிலையில், 2024 MT1 என்று பெயரிடப்பட்ட சிறுகோள் மணிக்கு 65,215 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது. ஏறத்தாழ 260 அடி விட்டம் கொண்ட இந்தச் சிறுகோள், அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையை விட பெரியது என்றும் சுமார் 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள இந்த சிறுகோள் ஜூலை 8ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வரும் என்றும் நாசா கணித்துள்ளது.

பூமி மீது மோதப்போகும் சிறுகோள்! தேதியைக் குறித்த நாசா விஞ்ஞானிகள்! என்ன நடக்கப்போகுதோ...

பூமிக்கு அருகில் வருகிறது என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரத்தைவிட நான்கு மடங்கு அதிக தொலைவில் பூமியைக் கடக்கக்கூடும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இருப்பினும் 2024 MT1 சிறுகோள் பூமியை நெருங்கி வருவதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், ஒருவேளை இது பூமி மீது மோதினால் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் நாசா எச்சரித்துள்ளது.

அதே நேரத்தில் பூமியை நெருங்கி வரும்போது 2024 MT1 சிறுகோளை படம்பிடிக்கவும் நாசா தயாராகி வருகிறது. சிறுகோள்களை ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் மற்றும் கிரகங்களின் தோற்றம் பற்றிய புரிதலை மேம்படுத்திக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

NASA : பூமிக்கு பெரும் அச்சுறுத்தல்.. பூமியை நோக்கி வரும் கோள்.. நாசா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

click me!