2 வது கல்யாணம் பண்ணிக்கல சிறை தான், முதல் மனைவியும் கம்பி எண்ணியே ஆகணும்... எந்த நாட்ல தெரியுமா?

 
Published : Apr 06, 2018, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
2 வது கல்யாணம் பண்ணிக்கல சிறை தான், முதல் மனைவியும் கம்பி எண்ணியே ஆகணும்... எந்த நாட்ல தெரியுமா?

சுருக்கம்

Marry more than one wife or go to jail Eritrean men told

இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்தால், அவர் சிறை செல்ல வேண்டியிருக்கும், ஒரு ஆண் எத்தனை கல்யாணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என எரித்ரியா மக்கள் கூறுகின்றனர்

இந்தியா உள்பட பல நாடுகளில் இரண்டாவது திருமணம் என்பது குற்றச்செயலாக பார்க்கப்படுகிறது. முறையான விவாகரத்து இன்றி இரண்டாவது திருமணத்திற்கு தயாரானால், நீதிமன்ற வழக்கு, சிறை தண்டனை... என பல சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால் எரித்ரியா நாடு, இரண்டாவது திருமண விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசமானது. ஏன் என்றால், ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் அதுமட்டுமல்லாமல் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருப்பது பெரிய குற்றமாம் குற்றமாம். அதோடு விடுவதாக இல்லை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், அவர் நிச்சயம் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்கிறார்கள், எரித்ரியா மக்கள்.

ஆமாம் ஏன் இந்த சட்டம்? எதற்காக சிறை தண்டனை?  அதற்கு ஒரு பெரிய காரணமும் இருக்கிறது. எரித்ரியா நாட்டில் அடிக்கடி போர்கள் நடக்குமாம். அந்த போருக்குப் போகும் ஆண்கள் கொத்து கொத்தாக செஹ்து முடிவதால், அங்கு ஆண்களின் எண்ணிக்கை பெண்களை விட பாதியாக குறைந்துள்ளதாம் குறைவாகவே இருக்கிறது. இதனால் பெண்களுக்கு திருமணமாகாமல் இருக்கிறார்கள், இதை சமாளிப்பதற்காகவே ஆண்களுக்கு இரண்டாவது திருமணம் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆண் மறுத்தாலும், முதல் மனைவி மறுத்தாலும்... அவர்களுக்கு சிறைத்தண்டனை கட்டாயமாக அனுபவிக்கனுமாம். அதேபோல ஒரு ஆண் இரண்டு பெண்களுக்கு மேல் திருமணம் செய்தாலும் அந்நாட்டில் குற்றமில்லை என சொல்கிறது அந்த நாட்டின் சட்டம். 

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!
புயல் காரணமாக சரிந்த சுதந்திரச் சிலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. வெளியான ஷாக் வீடியோ!