யூ டியூப்  தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு…. யார் சுட்டது ? பதற்றத்தில் ஊழியர்கள்….

 
Published : Apr 04, 2018, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
யூ டியூப்  தலைமை அலுவலகத்தில் துப்பாக்கி சூடு…. யார் சுட்டது ? பதற்றத்தில் ஊழியர்கள்….

சுருக்கம்

You tube office gun fire lady sucide

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது.

யூ டியூப்   அலுவலகத்துக்குள் நேற்ற திடீரென நுழைந்த மர்ம பெண் ஒருவர், அங்கு பணியில் இருந்த ஊழியர்கள்  மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தங்கள் கைகளை உயர்த்தியபடி அலுவலகத்துக்குள் இருந்து ஓடத் தொடங்கினர்.

இதையடுத்து அந்தப் பெண் தன்னைத் தானே சுட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 3 ஊழியர்கள் படுகாயடைந்தனர். இதையடுத்து, அந்த பகுதியை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதால் அப்பகுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

PREV
click me!

Recommended Stories

இத்தாலியில் மலையில் ஆயிரக்கணக்கான டைனோசர் கால்தடங்கள்! 21 கோடி ஆண்டுகள் பழமையானது!
புயல் காரணமாக சரிந்த சுதந்திரச் சிலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. வெளியான ஷாக் வீடியோ!