உறைபனியில் நூடுல்ஸ் சாப்பிட முயன்றவருக்கு என்ன ஆச்சு பாருங்க!

By SG Balan  |  First Published Jan 9, 2023, 6:24 PM IST

உறைபனிச் சூழலில் ஜேக் பிஷர் என்பவர் நூடுல்ஸ் சாப்பிட முயலும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.


இந்தியாவில் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமாக நிலவிவருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவால் தண்ணீர் குழாய்களுக்குள் நீர் உறைந்துபோகும் நிலை உள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் வரலாறு காணாத பனிப்பொழிவில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

இச்சூழலில் ஜேக் பிஷர் என்ற நடிகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் உறைபனியில் நூடுல்ஸ் சாப்பிட முயலும் காட்சி இடம்பெற்றுள்ளது.

Tap to resize

Latest Videos

கிண்ணத்தில் நூடுல்ஸை எடுத்துச் சாப்பிடத் தொடங்கியவரின் முகம் முழுவதும் உறைபனி படியத் தொடங்கியது. நம்பமுடியாத வகையில், அவரை தனது ஸ்பூனில் எடுத்த நூடுல்ஸ் அப்படியே உறைந்துபோய் நின்றுவிட்டது.

பிரேசிலில் அதிபர் மாளிகையைக் கைப்பற்றி போல்சனரோ ஆதரவாளர்கள் அட்டூழியம்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jake Fischer (@voicesofjake)

வீடியோவில் ஜேக் குளிரில் நடுங்கியபடி, “நூடுல்ஸ் சாப்பிடலாம் என்று வெளியே வந்தேன். பனி கொஞ்சம் அதிகமாகிவிட்டது” என்று கூறுகிறார்.

வைரலாகப் பரவிவரும் இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகிறார்கள். இந்த வீடியோவை 12.8 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

மீண்டும் தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்! தைவான் அரசு கண்டனம்

click me!