அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் அதிபர் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் அதிபர் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடான் அதிபரான சல்வா கீர், கடந்த டிசம்பர் மாதம் அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் அந்நாட்டு தேசிய கீதம் பாடப்பட்ட போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதிபர் சல்வா கீரும் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த எழுந்து நின்றார். அப்போது அவருக்கு அவசரமாக சிறுநீர் வந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: ஆசியாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் இலங்கையின் முக்கிய நகருக்கு இடம்
தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்திக்கொண்டிருக்கும் போது சிறுநீர் வந்ததால் செய்வதறியாத அவர் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதை அங்கிருந்த அனைவரும் பார்த்ததோடு அங்கிருந்த அனைத்து கேமிராக்களிலும் அந்த காட்சி பதிவாகியுள்ளது. ஆனால் அந்நாட்டு ஊடகங்கள் இதனை ஒளிப்பரப்பவில்லை. இருந்த போதிலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்தது.
இதையும் படிங்க: ஆசியாவில் குறைத்து மதிப்பிடப்பட்ட சுற்றுலாத் தளங்களில் இலங்கையின் முக்கிய நகருக்கு இடம்
இந்த வீடியோ வைரலானதை அடுத்து இந்த வீடியோவை வெளியிட்டதாக ஜோபல் டோம்பே, விக்டர் லாடோ, ஜோசப் ஆலிவர், ஜேக்கப் பெஞ்சமின், முஸ்தபா ஒஸ்மான், செர்பெக் ரூபன் உள்ளிட்ட 7 பத்திரிகையாளர்களை ரகசிய உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனிடையே பத்திரிகையாளர்கள் கைது கவலை அளிப்பதாக தெற்கு சூடான் ஊடகவியலாளர் சங்க தலைவர் பாட்ரிக் ஓயட் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பேசுபொருளாய் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.