பிரேசிலில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோவின் ஆதரவாளர்கள் அதிபர் மாளிளை மற்றும் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் ஊடுருவி அவற்றைக் கைப்பற்றியதால் அந்நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியா ஜெயிர் பொல்சனரோவைத் தோற்கடித்து அதிபராகப் பதவியேற்றார். இனாசியாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்காமல் பொல்சனரோ அமெரிக்காவுக்கு வெளியேறினார்.
இந்நிலையில், ஜெயிர் பொல்சனரோவின் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்றம், அதிபர் மாளிகை, உச்சி நீதிமன்ற வளாகம் ஆகியவற்றில் அத்துமீறி நுழைந்து அவற்றைக் கைப்பற்றினார்கள்.
எதிர்பாராத விதமாக ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே சமயத்தில் உள்ளே புகுந்ததால் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் அவர்களைத் தடுக்க முடியவில்லை.
ஆப்கனில் பெண்கல்விக்கான தடையை நீக்க ஐ.நா. வலியுறுத்தல்
பின்னர் அந்நாட்டு அதிரடிப்படை வந்து தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் மூன்று மணிநேரம் போராடி அத்துமீறிய கும்பலை விரட்டி அடித்தனர்.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததும் அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு அந்நாட்டு நாடாளுமன்றத்தைச் சூழ்ந்துகொண்டு அட்டகாசம் செய்தனர். அதேபோன்ற அத்துமீறல் அப்போது பிரேசிலிலும் நடந்திருக்கிறது.