அதிரடியாக பிரதமர் பதவி ராஜினாமா...!! அதிர்ச்சியில் உலக நாடுகள்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 24, 2020, 5:40 PM IST
Highlights

எனவே இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பிரதமர்  மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் வழங்கியுள்ளார் , இது குறித்து மலேசிய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.  
 

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் .  அவர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று  மலேசிய அரசிடம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன .  மகாதீர் முகமது கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரையில் மலேசிய பிரதமராக பதவி வகித்தவர் ஆவார் பின்னர் மீண்டும் 2018ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை பிடித்தார் .

  

 91 வயதாகும் மகாதீர் கடந்த 2018-ஆம் ஆண்டில் பதவி ஏற்றதில் இருந்து தொடர்ந்து  கூட்டணி கட்சிகளுடன் விரோதத்தை சம்பாதித்து வந்ததாக  கூறப்படுகிறது இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும்  புதிய கூட்டணிகளை உருவாக்கி நிலையான ஆட்சியை கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .  எனவே இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் பிரதமர்  மகாதீர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசியா மன்னரிடம் வழங்கியுள்ளார் , இது குறித்து மலேசிய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.  

ஆளும் கட்சிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு  காரணமாக  எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார் என உள்ளூர்  ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன ,  இந்நிலையில் பிரதமர் மகாதீர ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசர் ஏற்றுக்கொள்வாரா இல்லை  என்ற தகவல் வெளியாகவில்லை , சமீபத்தில் காஷ்மீர் விவகாரத்தில் கருத்து கூறி  இந்தியாவின் கண்டனத்தை பெற்றார் மகாதீர் என்பது குறிப்பிடதக்கது.   
 

click me!