சில மணி நேரங்களில் அனைவரும் சந்திப்போம் என தெரிவித்திருந்த நிலையில் அவர் முக்கிய அதிகாரிகளுடன் இந்தியா வருகை தந்துள்ளார் .
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனிய டிரம்ப் மற்றும் அவரது மகள் இவான்கா ட்ரம்பும் ஆகியோர் இந்தியா வருகை தந்துள்ளனர் . இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தார் , அவர் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார் . அதுமட்டுமல்லாது தனது மனைவி மகள் என குடும்பத்துடன் அவர் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை ஆகும் .
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு 11:45 மணிக்கு தனது குடும்பத்துடன் அவர் வந்தடைந்தார் அவருக்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவில் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளித்தனர் . அமெரிக்க அதிபர் வந்திறங்கிய விமான நிலையத்தை சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது . அமெரிக்கா - இந்தியா ஆகிய இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது , அத்துடன் வர்த்தக விவகாரங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இரண்டு நாள் பயணத்தில் ட்ரம்ப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார் , முன்னதாக இந்திய பயணம் குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள ட்ரம்ப் இந்தியா வருவதை எதிர்நோக்கி உள்ளேன் , நாங்கள் வழியில் இருக்கிறோம் , சில மணி நேரங்களில் அனைவரும் சந்திப்போம் என தெரிவித்திருந்த நிலையில் அவர் முக்கிய அதிகாரிகளுடன் இந்தியா வருகை தந்துள்ளார் . அவருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது .