இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்...!

Published : Jul 14, 2019, 06:15 PM IST
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்... அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்...!

சுருக்கம்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 பதிவாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர்.

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 பதிவாகி உள்ளது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்து சாலையில் தஞ்சமடைந்தனர். 

புவியியல் அமைப்பின்படி பூமியின் நெருப்புக் கோளம் என்றழைக்கப்படும் இந்தோனேசியா நாட்டில் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. அவ்வகையில்,  நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மாலுக்கு தீவில் உள்நாட்டு நேரப்படி இன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.3-ஆக பதிவாகியுள்ளது. 

இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் சாலையில் தஞ்சமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அதேபோல் இன்று காலை ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

புயல் காரணமாக சரிந்த சுதந்திரச் சிலை.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து.. வெளியான ஷாக் வீடியோ!
வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத கௌரவம்.. பிரதமர் மோடியை பெருமைப்படுத்திய எத்தியோப்பியா..