26 வயது வாலிபனை கல்யாணம் செய்த 65 வயது பாட்டி… காரணம் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க...

By sathish k  |  First Published Jul 14, 2019, 5:26 PM IST

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஸ்காட்லாந்து பாட்டி, ஒரு வாலிபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


இலங்கைக்கு சுற்றுலா வந்த ஸ்காட்லாந்து பாட்டி, ஒரு வாலிபனை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவர் டயன் டீ. இவர் அந்நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவராவார். இவர் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு சுற்றுலா வந்தார். இலங்கையை சுற்றி காண்பிக்க தனக்கு ஒரு உள்ளூர்வாசியை தேர்வு செய்ய நினைத்த டயன் டீக்கு பிரியஞ்சன் என்ற 26 வயது இளைஞன் கிடைத்துள்ளார். 

Latest Videos

அந்த இளைஞனும் இந்த பெண்ணை இலங்கையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளான். சென்ற இடங்களில் எல்லாம் டயன் டீ, பிரியஞ்சனிற்காக அதிகமாக செலவு செய்துள்ளார். அதை பார்த்த பிரியஞ்சன் டயன் டீயிடம் இருந்து காசுகளை கறக்க அன்பாக பேசி பழகி வந்துள்ளான். 

இவன் அன்பாக பேசுவதை பார்த்து மயங்கிய டயன் டீ, பிரியஞ்சனின் மீது காதலில் விழுந்துள்ளார். ஏற்கனவே பிரியஞ்சனிற்கு டயன் டீயிடம் இருந்து காசை கறக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த நிலையில் அவரது காதல் விஷயத்தை பிடித்துக்கொண்டு அவரை வீழ்த்த துவங்கினார். 

சுற்றுலா முடிந்து ஸ்காட்லாந்து திரும்பிய டயன் டீக்கு தனது 26 வயது காதல் பிரியஞ்சனை விட்டு விட்டு இருக்க மனமில்லை. இதனால் ஸ்காட்லாந்தை காலி செய்து விட்டு இலங்கையில் வந்து செட்டிலானார் டயன் டீ. அங்கு பிரியஞ்சனுடன் சேர்ந்து வாழ துவங்கினார். இங்குதான் அவர் பிரியஞ்சனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தன்னுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் பிரியஞ்சனிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் விபரம் டயன் டீக்கு தெரிந்தது. 

இருந்தாலும் அவருக்கு பிரியஞ்சனின் மீது உள்ள காதலால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். இதை பயன்படுத்தி பிரியஞ்சனும் அவரது குடும்பத்தினரும் டயன் டீயிடம் அடிக்கடி பணத்தை கறந்துள்ளனர். இந்நிலையில் ஒரு கட்டத்தில் தன் நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் பிரியஞ்சனை சக நண்பன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுவிட்டான். இதனால் பிரியஞ்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். 

இந்நிலையில் பிரியஞ்சனின் தோழர்கள் சிலர் டயன்டீ யை தொந்தரவு செய்து பிரியஞ்சன் இருந்த இடத்தை தன்னை வைத்துக்கொள்ளுமாறு டார்ச்சர் செய்ய துவங்கினர். இதனால் பயந்து ஸ்காட்லாந்திற்கே ஓடிவிட்டார். அதன் பின்னர் தான் பிரியஞ்சனும் தன்னிடம் காசுக்காக மட்டுமே பழகியுள்ளான் என்பதை டயன் டீ உண்ர்ந்துள்ளார். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

click me!