118 பேருடன் லிபிய விமானம் கடத்தல் - வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல்

First Published Dec 23, 2016, 5:36 PM IST
Highlights


A-320 ஏர்பஸ் என்னும் லிபிய நாட்டை சேர்ந்த மிகப்பெரிய விமானம் ஒன்று நடுவானில் கடத்தப்பட்டுள்ளது.

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் ஆதரவாளர்களால் கடத்தப்பட்ட இந்த விமானத்தில் 111 பயணிகளும் 7 விமான சிப்பந்திகளும் பயணித்தனர்.

மால்டாவிலிருந்து சபா எனும் நகருக்கு பயணித்த இந்த விமானத்தில் மர்ம நபர் ஒருவர் கையில் கிரானைடு குண்டுகளுடன் சென்றுள்ளார்.

திடீரென அந்த நபர் காக்பிட்டுக்கு சென்று விமானத்தை வெடிக்க செய்யபோவதாகவும் எனவே தான் சொல்லும் திசைக்கு திருப்பவேண்டும் எனவும் மால்டாவை நோக்கி திருப்பியுள்ளார்.

விமானத்தை கடத்திய மர்ம நபர் ஒருவர் மட்டும் வந்தாரா அல்லது குழுவாக வந்தனரா என்பது பற்றி தகவல் இல்லை.

2011ஆம் ஆண்டு லிபிய அதிபராக இருந்த மும்மார் கடாபி கொல்லப்பட்டதற்கு பிறகு லிபிய நாட்டில் அமைதியின்மையும் வன்முறையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மால்டா நகரில் தரையிறக்கப்பட்டுள்ள இந்த கடத்தப்பட்ட விமானதிற்கு 100 மீட்டருக்கு அருகில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மால்டா விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து விமானங்களும் திருப்பி விடப்பட்டுள்ளன.

மிக சிறிய தீவான இந்த மால்டா  ஐரோப்பிய யூனியனின் உறுப்பினராக உள்ளது.

பிரச்சனைக்குரிய வடக்கு திரிபோலி பகுதியிலிருந்து 500 கிமீ தொலைவில் உள்ளது இந்த மால்டா.

இன்பத விமானம் கடத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்டவின் பிரதமர் ஜோசப் மஸ்காட் இந்த விமான கடத்தல் குறித்து லிபியாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

click me!