பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி வசூலித்து தருபவரும், முக்கிய ஆலோசனைகளை வழங்குபவருமான ஜமாத் உல் தவா அமைப்பைச சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடை விதித்து, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் ஐஎஸ்ஐஎல் மற்றும் அல் கொய்தா தடைக்குழு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி வசூலித்து தருபவரும், முக்கிய ஆலோசனைகளை வழங்குபவருமான ஜமாத் உல் தவா அமைப்பைச சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடை விதித்து, ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் ஐஎஸ்ஐஎல் மற்றும் அல் கொய்தா தடைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் ஜூன் மாதம் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 5 பேரைத் தடைவிதிக்க இந்தியா, அமெரிக்கா கூட்டாக தீர்மானம் கொண்டுவந்தன. அதில் அப்துல் ரஹ்மான் மக்கியும் இருந்தார். ஆனால், அந்த தீர்மானத்தை நிறைவேறவிடமாமல் சீனா தடை ஏற்படுத்தியது. ஆனால் இந்த முறை ரஹ்மான் மக்கிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலின் ஐஎஸ்ஐஎல் மற்றும் அல் கொய்தா தடைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
லஷ்கர் இ தொய்பா மற்றும் அது சார்ந்த தீவிரவாத அமைப்புகள், அப்துல் ரஹ்மான் மக்கி ஆகியோர் நிதி திரட்டி, ஆட்களை தீவிரவாத அமைப்பில் சேர்த்து, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டனர். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா மற்றும் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில், அப்துல் ரஹ்மான் மக்கி தடை செய்யப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்று இந்தியா, அமெரிக்கா இணைந்து அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடை கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முயன்றபோது. அப்போது தொழில்நுட்ப ரீதியாக தடைகளை ஏற்படுத்தியது. சீனாவின் முட்டுக்கட்டை என்பது துரதிர்ஷ்டமாக அமைந்தது என்று இந்தியா சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
அப்துல் ரஹ்மான் மக்கி இந்தியாவில் ஏராளமான தீவிரவாத தாக்குதல்களுக்கு மூளையாக இருந்துள்ளார். குறிப்பாக, 2000 டெல்லி செங்கோட்டை தாக்குதல், 2008 ராம்பூர் தாக்குதல், 2008 மும்பை தாக்குதல், 2018ல் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் போன்றவற்றை நடத்த அப்துல் ரஹ்மான் உதவியுள்ளார்.
உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும்: 73 சதவீத சிஇஓ-க்கள் எதிர்பார்ப்பு
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் அரசியல் விவகாரத்தின் தலைவராகவும் அப்துல் ரஹ்மான் மக்கிஇருந்துள்ளார். ஜேயுடி மர்காசி மற்றும் தவாதி குழுவிலும் அப்துல் ரஹ்மான் உறுப்பினராக உள்ளார். இவரின் மைத்துனர் ஹவிஸ் சயத் இந்திய அரசால் தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஆரிந்தம் பக்சி கூறுகையில் “ அப்துல் ரஹ்மான் மக்கிக்கு தடைவிதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவை இந்தியா வரவேற்கிறது
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில் அப்துல் ரஹ்மான் இருந்துள்ளார், அந்த அமைப்புக்கு நிதி திரட்டியும் அளித்துள்ளார். இந்தப் பிராந்தியத்தில் தீவிரவாதத் தாக்குதல், மிரட்டல் முக்கியமாகஇருக்கும்போது, அதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது வரவேற்கக்கூடியது. தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது, தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியான, பின்வாங்காத நடவடிக்கையை எடுக்க சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும்”எனத் தெரிவித்தார்