இலங்கையில் மசாஜ் பார்லர் விபசாரத்தைத் தடுக்க புதிய கட்டுப்பாடு

By SG BalanFirst Published Jan 17, 2023, 4:24 PM IST
Highlights

இலங்கையில் உள்ள ஸ்பா, பார்லர் போன்றவற்றில் மசாஜ் செய்கிற பெயரில் விபச்சாரம் நடப்பதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாட்டை விதிக்க உள்ளது.

இலங்கையில் செயல்படும் ஸ்பா, பார்லர் போன்ற அழகு நிலையங்களில் மசாஜ் செய்வதாகக் கூறிக்கொண்டு விபசாரம் செய்வது அண்மையில் அம்பலமானது. இதனைத் தடுக்கும் வகையில் அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக அந்நாட்டு ஆயுர்வேதத்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்ட வரைவில் மசாஜ் சேவை வழங்கும் இடங்களில் மாற்று பாலினத்தவர்களைக் கொண்டு யாருக்கும் மசாஜ் செய்யக் கூடாது என்ற விதிமுறை இடம்பெற்றுள்ளது. அதாவது, இந்தச் வரைவு சட்டமாகும்போது ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்யவதற்குத் தடை விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி ஸ்பா, பார்லர் போன்றவற்றை நடத்துபவர்கள் தொழில்துறையில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்றும் ஆயுர்வேத அமைச்சகத்தின் கீழ் பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் 60 ஆண்டுகளில் சுருங்கிய மக்கள் தொகை; உழைக்கும் வயதினரும் குறைந்து தடுமாறும் பீஜிங்; காரணம் என்ன?

எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்திலும் இச்சட்டத்தை செயல்படுத்துவது முக்கியம் என்று அந்நாட்டு ஆயுர்வேதத்துறை ஆணையர் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,073 ஆக இருந்தது. இது சென்ற 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் 12 சதவீதம் உயர்ந்து 4,556 ஆக இருந்தது. இதேபோல 2021 இரண்டாவது காலாண்டில் 4,141 ஆக இருந்தது, 13.2 சதவீதம் அதிகரித்து 4,686 ஆகக் கூடிவிட்டது.

இலங்கையில் இதுவரை குறிப்பாக விபச்சாரத்தைத் தடை செய்யும் எந்தச் சட்டமும் இல்லை. 180 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் காலனி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட பிச்சை எடுத்தல், நோயைப் பரப்புதல் போன்றவற்றுக்கு எதிரான சட்டத்தின் கீழ்தான் விபசாரம் செய்பவர்கள் கைதுசெய்யப்படுகிறார்கள்.

Post Office Schemes: அதிக லாபம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்

click me!