தெருவில் கைவிடப்படும் சடலங்களை எடுத்து பத்திரப்படுத்த எங்களிடம் அட்டைப் பெட்டிகள் மட்டுமே இருக்கிறது என்றாலும் கூட இறந்த மக்களுக்கு ஒரு கண்ணியமான இறுதி சடங்கை செய்ய இது பேருதவியாக இருக்கும் என தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் .
கொரோனா வைரசால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் சடலங்கள் சாலைகளில் அழுகும் அவலநிலை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது . இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலக அளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது . அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , போன்ற நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் லத்தீன் அமெரிக்க நாடான ஈகுவடாரின் கடற்கரை நகரமான குயாகுவில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இந் நகரத்தில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் . இந்நிலையில் ஈகுவடார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கம் வீரியமாக உள்ளதால் , நாளொன்றுக்கு 100 பேர் உயிர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
இதனால் அந்நாட்டில் இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்துவதற்காக குளிரூட்டப்பட்ட ராட்சத கொள்கலன்கள் அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது என நகர மேயர் சிந்தியா விக்டோரியா தெரிவித்துள்ளார் . இதுவரை 150 பேர் துறைமுக நகரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குயாகுவில், தியோடோரோ , மால்டொனாடோ, ஆகிய மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது . இது குறித்து தெரிவித்துள்ள ஈகுவடார் அரசு , வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தங்களால் சிகிச்சை வழங்க முடியவில்லை , எங்கள் சக்திக்கு மீறி சேவையாற்றி வருகிறோம் என தெரிவித்தார் . இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலத்தை பத்திரப்படுத்த சவப் பெட்டிகள் இல்லாததால் உள்ளூர் தொழிற்சாலைகளிலிருந்து அட்டைப் பெட்டிகளை அரசு கொள்முதல் செய்து வருகிறது . உடல்கள் கல்லறைக்கு எடுத்து செல்லப்படும் வரை அதை பாதுகாக்க மரப் பெட்டிகள் வாங்க அதிக செலவு ஆகும் என்பதால் , அட்டைப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது .
20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட துறைமுக நகரமான குயாகுவில் இப்போது மரண நகரமாக மாறியுள்ளது . இது பற்றி கூறும், ஈக்வடார் அதிபர் லெனின் மோரேனோ, தெருவில் கைவிடப்படும் சடலங்களை எடுத்து பத்திரப்படுத்த எங்களிடம் அட்டைப் பெட்டிகள் மட்டுமே இருக்கிறது என்றாலும் கூட இறந்த மக்களுக்கு ஒரு கண்ணியமான இறுதி சடங்கை செய்ய இது பேருதவியாக இருக்கும் என தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் . லத்தீன் அமெரிக்காவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈகுவடாரில் இதுவரை 180 பேர் இருந்ததாக அதிகாரப்பூர்வமாக அரசு தெரிவித்துள்ளது , சுமார் 3 ஆயிரத்து 646 பேருக்கு தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக ஜான் ஆப் கிங்ஸ் பல்கலைக்கழகம் கூறியுள்ளது . ஆனால் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த அதிபர் லெனின் மோரேனோ உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக மிக அதிகம் , ஒரு நாளைக்கு 100 பேர் உயிரிழக்கின்றனர் , எப்போதுமே சோதனை நேரங்களில் உண்மைகளைச் சொல்லித்தான் ஆக வேண்டும் , அதன் வேகத்திற்கு தங்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என கவலை தெரிவித்திருந்தார் . கிட்டத்தட்ட 3500 க்கும் மேற்பட்டோர் இதுவரையில் அங்கு உயிர் இழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது .