தீவிர சிகிச்சை பிரிவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்..! மோசமடைந்தது உடல்நிலை..!

By Manikandan S R S  |  First Published Apr 7, 2020, 7:32 AM IST

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு போரிஸ் ஜான்சன் உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்திருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்படவில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பொறுப்புகள் அனைத்தும் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது.


கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இன்றைய நிலவரப்படி 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 73 ஆயிரத்து 893 பேர் கருணாவிற்கு உயிரிழந்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான், இந்தியா என உலகின் 203 நாடுகளுக்கு பரவி தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Latest Videos

இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 373 ஆக இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(55) கொரோனாவால் பாதிக்கப்பட்டது அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் சிகிச்சை இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகமாகவே அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு அவரது உடல்நிலை மோசமான கட்டத்தை அடைந்திருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு அவருக்கு வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்படவில்லை என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பொறுப்புகள் அனைத்தும் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பிரதமரின் உடல்நிலை குறித்து இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு தொடர்ந்து தகவல்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜான்சனின் உடல்நிலை குறித்து உலக தலைவர்கள் பலரும் விசாரித்து வருகின்றனர்.

click me!