2,50000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்..!! உலக மக்களுக்கு பிறந்தது புதிய நம்பிக்கை..!!

Published : Apr 06, 2020, 06:32 PM ISTUpdated : Apr 06, 2020, 06:33 PM IST
2,50000 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்..!! உலக மக்களுக்கு பிறந்தது புதிய நம்பிக்கை..!!

சுருக்கம்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஸ்பெயின் மக்களின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது .  ஏனெனில் ஐரோப்பா கண்டத்திலேயே கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் மாறிவருகிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீண்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன .  உலகமே கொரோனா வைரஸை  பீதியில் உறைந்துள்ள  நிலையில் அந்த வைரஸிலிருந்து இரண்டரை லட்சம் பேர் குணமடைந்திருப்பது  மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . சுமார்  150க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.   அமெரிக்கா , இத்தாலி ,  ஸ்பெயின் ,  ஈரான் ,  தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதித்துள்ளன .  இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இத்தாலியில் இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை கடந்துள்ளது  .  இதுவரை அமெரிக்காவில் மட்டும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை கடந்துள்ளது . 

வைரஸ் பரவலின் மையம் என அமெரிக்காவை உலக நாடுகளில் உச்சரித்து வருகின்றனர்.  அந்த அளவிற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயாக  மக்கள் மத்தியில் வைரஸ் பரவி வருகிறது .  இதனால் வல்லரசு நாடான அமெரிக்கா செய்வது அறியாது திகைத்து வருகிறது .  கிட்டத்தட்ட உலக அளவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது .  இந்நிலையில்  வைரஸ் தாக்கம் குறித்து உலக அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜான் ஹாப்கின்ஸ்  மையம் ,  கொரோனா வைரசின் நிலவரம் குறித்து தகவல்களை ஆராய்ந்து வெளியிட்டு  வருகிறது , இந்நிலையில்  இந்த வைரஸ் குறித்து வேகமாக பாதிக்கப்பட்டு வரும் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் கூறுகையில் , கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஸ்பெயின் மக்களின் வாழ்க்கை ஆபத்தான கட்டத்தில் உள்ளது .  ஏனெனில் ஐரோப்பா கண்டத்திலேயே கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் மாறிவருகிறது. 

ஆனாலும் இந்த வைரஸ் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை கடுமையாக தாக்குகிறது ஆனால் பலர் லேசான நோய் அறிகுறிகளுடன் அதிலிருந்து மீண்டு வந்து விடுகின்றனர்.  என தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் உலக அளவில் இந்த வைரஸ் ஏற்படுத்திய தாக்கம் குறித்து ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் வெளியிட்டுள்ளது ,  கடந்த ஞாயிற்றுக்கிழமை இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.2 மில்லியனாக இருந்தது .  இறந்தோர் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது மொத்தத்தில் இந்த வைரஸில் இருந்து இதுவரை இரண்டரை லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அது தெரிவித்துள்ளது .  உலக அளவில் எடுக்கப்பட்டுள்ள சமூக விலகல் மற்றும் முழு அடைப்பு நடவடிக்கைகள் அதன் பரவலை வெகுவாக கட்டுப்படுத்தியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

 

PREV
click me!

Recommended Stories

பாக். ஆதரவுடன் ஜெய்ஷ், லஷ்கர் பயங்கரவாதிகள் ரகசிய சந்திப்பு! இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!