74 ஆயிரத்தை கடந்தது உயிர் பலி..! உலக நாடுகளை உலுக்கி எடுக்கும் கொரோனா..!

By Manikandan S R S  |  First Published Apr 7, 2020, 7:59 AM IST

உலகம் முழுவதும் 13,45,653 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 74,644  பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2,78,413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 


உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,331 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 203 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

Latest Videos

இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்து 111 பேர் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 13,45,653 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 74,644  பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2,78,413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

உலக தலைவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல் நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்ட நிலையில் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து இங்கிலாந்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இங்கிலாந்து பிரதமர் விரைந்து நலம் பெற வேண்டும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

click me!