பூமியில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது
பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதற்கிடையே, உலகின் சராசரி வெப்பநிலை கடந்த ஜூலை 3ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது. அந்த நாள் உலகின் மிக அதிக வெப்பம் பதிவான நாளாக பதிவாகியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்த நிலையில், அதனை தாண்டி ஜூலை 3ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.
அட..! உண்மையான வாஷிங் பவுடர்தான் போலயே? அஜித் பவார் முகாமுக்கு கிடைத்த முக்கியத் துறைகள்!
undefined
இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சிகர தகவலாக பூமியில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பம் கடந்த ஜூன் மாதம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) ஆகியவை தெரிவித்துள்ளது. மேலும், 10 வெப்பமான ஆண்டுகளில் 99 சதவீதம் இடம் 2023ஆம் ஆண்டு இடம் பிடிக்கும் எனவும், முதல் ஐந்து இடங்களுக்குள் 2023ஆம் ஆண்டு வருவதற்கு 97 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகவும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கு எல் நினோ சீதோஷண நிலையும் ஒரு காரணம் எனவும் NOAA தெரிவித்துள்ளது. இந்த சுழற்சி முறை, பசிபிக் பெருங்கடலில் சாதாரண அளவை விட நீரின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அதிக வெப்பமானது உலகெங்கிலும் உள்ள வானிலையை மாற்றி, உலகளாவிய வெப்பநிலையை அதிகரிக்கிறது. 1991-2020 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலை 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் அதிகரித்தது. அதனை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக கடந்த ஜூன் மாதம் வெப்பம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.
உலகளவில் கடந்த 174 ஆண்டுகால தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் பதிவின்படி, வெப்பநிலையில், கடந்த ஜூன் மாதமே அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை பதிவான உலக மேற்பரப்பு வெப்பநிலையானது இதுபோன்று இதுவரை பதிவு செய்யப்பட்டதில் மூன்றாவது வெப்பமான காலகட்டமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் NOAA தெரிவித்துள்ளது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் சுற்றுச்சூழல் தகவல்களுக்கான தேசிய மையங்களின் (NCEI) விஞ்ஞானிகள் ஜூன் மாத உலக மேற்பரப்பு வெப்பநிலை 20 ஆம் நூற்றாண்டின் சராசரியான 15.5 C ஐ விட 1.05 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். நீண்ட கால சராசரியை விட ஜூன் மாத வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸைத் தாண்டியது இதுவே முதல் முறை என்று NOAA தெரிவித்துள்ளது.
பலவீனமான எல்-நினோ, கடந்த மே மாதம் முதல் மீண்டும் எழுச்சியடைந்தது. அது ஜூன் மாதம் வலுவடைந்தது. இதனால், பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்தது எனவும் NOAA தெரிவித்துள்ளது.