மலேசியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் காணாமல் போன 17 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 61 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரின் புறநகர் பகுதியான சிலாங்கூர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற இடம் மலைப்பகுதி என்றும், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் முகாமிட்டுள்ள பண்ணை வீட்டின் அருகில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் தமிழகம்... 5வது ஆண்டாக NO.1 மாநிலமாக நீடிப்பு..!
விபத்து நடைபெற்ற பகுதி மிகவும் செல்வச் செழிப்பான பகுதி என்று கூறப்படுகிறது. மேலும் இப்பகுதியில் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. நிலச்சரிவில் மொத்தமாக 94 பேர் சிக்கியுள்ளனர். அவர்களில் 61 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 16 பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 17 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. விபத்து காரணமாக சுமார் 1 ஏக்கர் பரப்பிலான நிலம் மண்ணால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காடுகளை அழித்து கட்டிடம் கட்டுவது, நிலத்தை ஆக்கிரமிப்பது உள்ளிட்ட இயற்கைக்கு மாறான செயல்களால் தான் இதுபோன்ற பேரிடர் சம்பவங்கள் நடைபெறுவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.