வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல்முறையாக உலகின் பார்வைக்கு தனது மகளை இன்று அறிமுகப்படுத்தினார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முதல்முறையாக உலகின் பார்வைக்கு தனது மகளை இன்று அறிமுகப்படுத்தினார்.
தனது மகளின் கைகளைப் பற்றிக்கொண்டு அதிபர் கிம் ஜாங் உன், ஏவுகணை ஏவும் தளம் நோக்கி நகரும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
undefined
வடகொரியா வசாங்-17 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நேற்று ஏவி பரிசோதனை செய்தது. இந்த பரிசோதனைக்கு முன்பாக அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் செல்வது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது.
100 கோடி இளைஞர்கள் காது கேளாமல் போக ஆபத்து ! ஹெட்போன், இயர்பட் பயன்பாடு குறித்து எச்சரிக்கை
அதிபர் கிம் ஜாங் உன் இதுவரை தனது மகளை வெளிஉலகிற்கு அறிமுகப்படுத்தியதே இல்லை. முதல்முறையாக தற்போது தனது மகளை அறிமுகப்படுத்தியுள்ளார், இதை வடகொரிய ஊடகங்களும் உறுதி செய்துள்ளன.
ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் மகள் பெயர் என்ன, என்ன வயது, என்ன படிக்கிறார் என்பது குறித்து வடகொரிய ஊடகங்கள் தெரிவிக்கவில்லை. வெள்ளை நிறத்தில் மேல்கோட்அணிந்த சிறுமி, தனது தந்தையின் விரல்கள் பற்றி, ஏவுகணை ஏவும் தளத்தை காணச் செல்வது போன்று புகைப்படம் உள்ளது.
அமெரிக்காவின் ஸ்டிம்சன் மையத்தின் வல்லுநர் மைக்கேல் மேடன் கூறுகையில் “ வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் முதல்முறையாக பொது நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, கிம் ஜிங் ஏதோபாதுகாப்பாக உணர்ந்த காரணத்தால்தான் அவரின் மகளை உடன் அழைத்து வந்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 3 குழந்தைகள் உள்ள எனத் தெரிகிறது. இதில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கலாம். என சிலஅரசியல் வல்லுநர்கள்தெரிவிக்கிறார்கள்
2013ம் ஆண்டு ஓய்வு பெற்ற அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் டெனிஸ் ரோட்மேன் கூறுகையில் “ வடகொரிய அதிபருக்கு பெண் குழந்தை உள்ளது. அவர் பெயர் ஜூ ஏ.வடகொரியாவுக்கு சென்றுவிட்டு வந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது. அப்போது வடகொரிய அதிபர், அவரின் குடும்பத்தாருடன் சில மணிநேரத்தை செலவிட்டேன்.
ஜு ஏ-க்கு ஏறக்குறைய 12முதல் 13 வயதிருக்கலாம். இப்போது அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கலாம்.அல்லது ராணுவத்தில் சேர்ந்திருக்கலாம். அவரின் தந்தைக்குப்பின் நாட்டை நிர்வகிக்கும் பொறுப்புக்கு ஜூ வைதயார் செய்யலாம். ஜூவை தயார் செய்யும் பணியில் அதிபர் கிம்மின் சகோதரி பின்னணியில் இருக்கிறார் ” எனத்தெரிவித்தார்