காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பிராம்ப்டனில் காலிஸ்தான் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்வதில் நிஜ்ஜார் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாபி ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அவர் சுட்டுக்க்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ரே நகரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராக இருந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சீக்கியர்கள் நீதிக்கான (SFJ) பிரிவினைவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தார். பிராம்ப்டன் நகரில் காலிஸ்தான் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்ததில் முக்கிய பங்கு வகித்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது, பயங்கரவாத தாக்குதல்களுக்கு சதி செய்ததாக தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
போதை மயக்கத்தில் இருந்த பெண்ணைத் தூக்கிச் சென்று பலாத்காரம்! இந்திய வம்சாவளி மாணவர் கைது!
முன்னதாக, பஞ்சாபில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா நாட்டை சேர்ந்த அதிகாரிகளை இந்தியா கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.