போதை மயக்கத்தில் இருந்த பெண்ணைத் தூக்கிச் சென்று பலாத்காரம்! இந்திய வம்சாவளி மாணவர் கைது!

Published : Jun 18, 2023, 04:42 PM IST
போதை மயக்கத்தில் இருந்த பெண்ணைத் தூக்கிச் சென்று பலாத்காரம்! இந்திய வம்சாவளி மாணவர் கைது!

சுருக்கம்

இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி மாணவர் குடிபோதையில் ஒரு பெண்ணை தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்

இங்கிலாந்தில் கிளப் ஒன்றில் சந்தித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

20 வயதான ப்ரீத் விகால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் உள்ள தனது குடியிருப்புக்கு போதையில் இருந்த பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். ப்ரீத்தும் அந்தப் பெண்ணும் கார்டிஃப் நகரில் ஒரு இரவு நேரத்தில் தனித்தனி நண்பர்கள் குழுக்களுடன் சென்றிருந்தனர். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துள்ளனர்.

"பாதிக்கப்பட்டவர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, இரவு முழு போதையில் இருந்தார். கிளப்பிற்கு வெளியே வந்து ப்ரீத் விகாலை சந்தித்தார். இருவரும் உரையாடலில் ஈடுபட்டு தங்கள் குழுக்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ப்ரீத் விகல் அந்த பெண்ணை தனது கைகளிலும் தோள்களிலும் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. வெளிவந்துள்ளது. சவுத் வேல்ஸ் காவல்துறை வெளியிட்ட அந்த வீடியோவில் 20 வயது இளைஞன் கார்டிஃப் சாலைகள் வழியாக அந்தப் பெண்ணை தனது பிளாட்டுக்கு அழைத்துச் செல்வதைக் காணமுடிகிறது.

அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற ப்ரீத், அவரை புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த பெண் என்ன நடந்தது என்பதை அதிகாரிகளுக்குத் தெரிவித்து புகார் கூறினார். பாதுகாப்பு கேமரா காட்சிகள், இன்ஸ்டாகிராம் மூலம் ப்ரீத் விகாலை அடையாளம் கண்டு அவரைக் கைது செய்திருப்பதாகவும் போலீசார் சொல்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?