லண்டன்.. அரச குடும்பத்தினருக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறு - Nostradamusன் கணிப்புகள் உண்மையில் நடக்கின்றதா?

Ansgar R |  
Published : Mar 23, 2024, 06:33 PM IST
லண்டன்.. அரச குடும்பத்தினருக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறு - Nostradamusன் கணிப்புகள் உண்மையில் நடக்கின்றதா?

சுருக்கம்

Nostradamus Predictions : பாபா வாங்காவை போல நாஸ்ட்ராடாமஸ் என்பவருடைய கணிப்புகளும், பல முறை உண்மையாக நடந்துள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

லண்டனில் அரச குடும்பத்தை சேர்ந்த கேட் மிடில்டன் மற்றும் கிங் சார்லஸின் உடல்நலப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட தற்போதைய நிகழ்வுகளுக்கு மத்தியில் 15ம் நூற்றாண்டின் தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸின் பண்டைய கணிப்புகள் தற்போது நடந்து வருவதாக நம்பப்படுகிறது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம், ஹிரோஷிமா குண்டுவெடிப்பு மற்றும் நெப்போலியனின் எழுச்சி ஆகியவற்றை சரியாக கணித்த நோஸ்ட்ராடாமஸ், 2024ல் அரசு குடும்பத்திற்கு கடினமான காலம் ஏற்படும் என்று கூறியுள்ளார் என்று நம்பப்படுகிறது. 

நோஸ்ட்ராடாமஸ், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவரது ரகசிய வசனங்களில், ஒரு ராஜாவின் சாத்தியமான துறவு மற்றும் எதிர்பாராத வாரிசின் எழுச்சியை முன்னறிவித்துள்ளார். இது இப்போது மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் ஹாரி சம்பந்தப்பட்ட தற்போதைய சூழ்நிலையை எதிரொலிக்கிறது என்று நம்பப்படுகிறது. மேலும் அவர் கூற்றுப்படி "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" மற்றும் "ராஜாவின் அடையாளமில்லாத ஒருவரால், மாற்றப்படுவார்" என்று தெரிவித்துள்ளார். 

இத்தாலி பிரதமர் ஜிரோஜியா மெலோனி.. இணையத்தில் பரவிய டீப் ஃபேக் ஆபாச வீடியோ - பல கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு!

கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், இது அவர் விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சிகிச்சையில் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது. மன்னர் சார்லஸ் தானாக முன்வந்து அல்லது அவரது உடல்நிலை தொடர்பான அழுத்தம் காரணமாக பதவி விலகக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், அரச கடமைகளில் அதிக அக்கறை காட்டாத இளவரசர் ஹாரி எப்படி மன்னராக முடியும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.

அதே போல லண்டனில் உள்ள வேல்ஸ் நகரின் இளவரசி கேட் மிடில்டனின் உடல்நலயும் கவலைக்கு உரிய வகையில் மாறி வருகின்றது. ஆகையால் நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகளும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. வேல்ஸ் இளவரசி சமீபத்தில் புற்றுநோயுடன் போராடி வருகின்றார் என்று நம்பட்ட நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு புற்று நோய் இல்லை என்றும், மாறாக வேறொரு நோயுடன் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியா எங்கள் "நெருங்கிய கூட்டாளி" - டெல்லியில் இருந்து "கடன் நிவாரணம்" கோரிய மாலத்தீவு அதிபர் முகமது முய்சு!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!