
தென்னாப்பிரிக்காவில் உள்ள பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவிற்கு இருந்த யானை ஒன்று, சுற்றுலா பயணிகள் சென்ற டிரக்கை பலமுறை தாக்கும் பயங்கர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த திங்களன்று பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகள் பலர் அந்த ட்ரக்கில் இருந்துள்ளார்.
பொதுவாக இந்த தேசிய விலங்கியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட சல்லடை போன்ற அமைப்பு கொண்ட பெட்டியில், சுற்றுலா பயணிகளை அமர வைத்து ஒரு டிரக் மூலம் வன விலங்குகளை சுற்றிக்காட்ட அழைத்துச் செல்வார்கள். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமையும் அதேபோல சில சுற்றுலாப் பயணிகளை அழைத்துக் கொண்டு தேசிய பூங்காவிற்குள் சென்றுள்ளது அந்த வண்டி.
அப்பொழுது அந்த வனவிலங்கு சரணாலயத்திலே வசித்து வரும் மிகப்பெரிய ஒரு யானையின் அருகே அந்த ட்ரக் சென்றுள்ளது. வண்டியின் ஓட்டுனர் சுற்றுலா பயணிகளை எச்சரித்தும், அதில் சிலர் தங்களுக்கு யானையினுடைய அழகிய புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக, இன்னும் கொஞ்ச தூரம் அந்த யானையருகே செல்ல கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆனால் வழக்கமான தொலைவில் இருந்து யானை பார்க்காமல், அந்த வாகனம் சத்தத்துடன் தனது அருகில் வந்ததும், அதனை தனது எதிரி என பாவித்த யானைகோபம் அடைந்து அந்த ட்ரக்கை துரும்பை நகர்த்துவது போல இரண்டுக்கும் மேற்பட்ட முறை முட்டி தூக்கி தள்ளியது. ஆனால் அந்த வாகனத்தை இயக்கிய ஓட்டுனர் மிகவும் திறமை வாய்ந்த ஒரு வனவியல் ஆர்வலர் என்பதனால் அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடாமல் தொடர்ந்து குரல் எழுப்பி, வண்டியின் ஓசையை அதிகமாக எழுப்பி அந்த யானையை பின்னடைய செய்துள்ளார்.
அதன்பிறகு பத்திரமாக அந்த பயணிகளை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அவர் கொண்டு சென்றுள்ளார். உண்மையில் அந்த ஓட்டுனரின் சாதுரியத்தால் அந்த மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று இணையவாசிகள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மெக்சிகன் தொழிலதிபர் கிரேசியா முனோஸை திருமணம் செய்தார் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயல்..!