முதல்வர் ஜெயலலிதா மறைவு - கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா தள்ளிவைப்பு

 
Published : Dec 07, 2016, 08:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
முதல்வர் ஜெயலலிதா மறைவு - கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா தள்ளிவைப்பு

சுருக்கம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திறப்பு விழா முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 கச்சத்தீவில் இலங்கை அரசால் ரூ.1 கோடி செலவில் புதியதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் இன்று திறப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பக்தர்கள் செல்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தடையை மீறி படகுகளில் செல்வோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதையொட்டி திறப்பு விழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் நேற்று அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசம் மீது கை வைத்தால் ஏவுகணைகள் பாயும்! இந்தியாவுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
அமெரிக்காவை விட்டு வெளியேறும் சட்டவிரோத குடியேறிகளுக்கு ரூ.3 லட்சம்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு!