மோடி தொடங்கிய ஆட்டம்..!! அவசரப்பட்டால் ஆபத்து...! பாக் மக்களை சமாதானப்படுத்தும் இம்ரான்...!

By vinoth kumar  |  First Published Aug 28, 2019, 12:54 PM IST

இந்தியா அணு ஆயுத வல்லமை பெற்றநாடு என்பதால் இருவரும் மோதிக்கொள்ளும் பட்சத்தில் அது உலகநாடுகளையும் பாதிக்கும் எனவே 
நிதானமாக இருந்து, வரும் செப்டம்பர் மாதம்  கூடவுள்ள ஐநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து நிச்சயம் நியாயம் கேட்பேன் என்று அவர் உரையாற்றினார். அவரின் தொலைக்காட்சி உரை எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் எடுபடவில்லை .


ஆப்கனிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு  இந்தியா பயன்படுத்தும் பாக் வான்வழிப்பாதையை முழுவதுமாக மூட பிரதமர் இம்ரான்கான் முடிவு செய்துள்ளார் என பாகிஸ்தான் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நேற்று அறிவித்துள்ளார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் சரியாக கையாள வில்லை என்று எதிர்கட்சியினர் மற்றும் பாகிஸ்தான் மக்களும் குற்றஞ்சாட்டி வருகின்றனர் இதானல் இம்ரானுக்கு  நெருக்கடி அதிகரித்துள்ளது.

ஜி7 மாநாட்டின்போது  இந்தியாவை காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கண்டிப்பார், என பாகிஸ்தான் எதிர்பார்த்துவந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனை இரு நாட்டு விவகாரம் அதை அவர்களே தீர்த்து கொள்வார்கள் என கூறிவிட்டு ட்ரம்ப் ஒதுங்கிவிட்டார்.  இதனால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நம் பிரதமர் மோடியைப் போலவே, அவரும் பாகிஸ்தான் மக்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானைப்போலவே இந்தியா அணு ஆயுத வல்லமை பெற்றநாடு என்பதால் இருவரும் மோதிக்கொள்ளும் பட்சத்தில் அது உலகநாடுகளையும் பாதிக்கும்

Latest Videos

எனவே நிதானமாக இருந்து, வரும் செப்டம்பர் மாதம்  கூடவுள்ள ஐநா மன்றத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்து நிச்சயம் நியாயம் கேட்பேன் என்று அவர் உரையாற்றினார். அவரின் தொலைக்காட்சி உரை எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் எடுபடவில்லை .இந்த சூழ்நிலையில் நேற்று மாலை இஸ்லாமாபாத்தில் இம்ரன்கான் தலைமையில் அவரச அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அதில் காஷ்மீர் விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  அப்போது, ஆப்கனிஸ்தானுடனான வர்த்தகத்திற்கு இந்தியா பயன்படுத்தி வரும் பாக் வான்வழிப்பாதைய முழுவதுமாக மூடுவது என முடிவு செய்யப்பட்டது. 

பின்னர் அது குறித்து தகவல் வெளியிட்ட பாகிஸ்தான் நாட்டின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பவாத் சவுத்ரி,  காஷ்மீர் விவகாரத்தை இம்ரான்கான் உற்று கவனித்து வருகிறார்,  இந்தியாவிற்கு தக்க நேரத்தில் தக்க பாடம் புகட்டப்படும் என்று தெரிவித்த அவர், மோடி துவக்கிவைத்த இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் முடித்துவைக்கும் என்றார். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை பிரதமர் இம்ரான்கான்  சரியாக கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் மற்றும் பாகிஸ்தான் மக்கள் அவரை  கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் இம்ரானுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 

click me!