இந்தியாவே தேவையில்லை... பாகிஸ்தானுக்குள்ளேயே பதம் பார்க்கப்படும் இம்ரான்கான்..!

By Thiraviaraj RM  |  First Published Aug 27, 2019, 6:12 PM IST

பாகிஸ்தானின் தற்போதைய பரிதாப நிலைக்கு பிரதமர் இம்ரான் கானின் பலவீனமான கொள்கைகளே காரணம் என பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.


பாகிஸ்தானின் தற்போதைய பரிதாப நிலைக்கு பிரதமர் இம்ரான் கானின் பலவீனமான கொள்கைகளே காரணம் என பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து  சட்டபிரிவு 370 நீக்கத்திற்கு பின்னர், சர்வதேச அரங்கில் பிரச்சினையை எழுப்ப பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துள்ளது. அத்தோடு உலக நாடுகளிடம் பாகிஸ்தான் நிராகரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இந்தியாவை மட்டுமின்றி எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களையும் இம்ரான் கான் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Latest Videos

அந்த வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவால் பூட்டோ, ’’பிரதமர் இம்ரான் கானின் காஷ்மீர் கொள்கையை தோல்வியில் முடிந்துள்ளது. தற்போதைய விவகாரங்களுக்கு இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே காரணம்.  காஷ்மீர் குறித்த எங்கள் கொள்கை ஸ்ரீநகரை எவ்வாறு கைப்பற்றுவது? என்பது பற்றியதாக இருக்கும். இப்போது அது முசாபராபாத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றியதாக இருக்கிறது. முசாபராபாத் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர்.

காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் உலகம் முழுவதிலும் இருந்து உதவி கோரியுள்ளார், ஆனால் அவர் எல்லா இடங்களிலும் ஏமாற்றங்களையே பரிசாக பெற்று வருகிறார். பாகிஸ்தானின் உச்ச நட்பு நாடான சீனா அதை ஆதரிக்க மறுத்துவிட்டது, இந்தியாவுடனான உறவுக்கு இடையூறு இது அமைந்துவிடும் எனவும் அச்சப்படுகிறது’’ என அவர் விமர்சித்துள்ளார்.

click me!