கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் இந்த முறை அவருக்கு பெரும்பான்மை கிடைக்காததால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.
கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், கனடாவில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 338 உறுப்பினர்களை கொண்ட கனடா மக்களவைக்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களில் வென்றுள்ளது.
ஆட்சியமைக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் ஜஸ்டின் ட்ரூடோ சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க உள்ளார்.
கனடா பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கனடா பிரதமராக மீண்டும் தேர்வாகியுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.