ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக உலகம் ஒன்று பட்டுள்ளதாக, ரூ்யாவிடம் இருந்த எந்த சைபர் தாக்குதல்கள் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கிறோம்.
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரெிவித்துள்ளார்.
உலக நாடுகள் எதிர்ப்பயைும் மீறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு கூட்டு பதிலடியை கொடுக்கும் நடவடிக்கை தொடர்பாக ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேட்டியளிக்கையில்;- போரை தேர்ந்தெடுத்த ரஷ்யாவும் அந்நாட்டு அதிபர் புதினும் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. ரஷ்ய படைகளை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்புவதை பைடன் திட்டவட்டமாக நிராகரித்தார். நேட்டோ நாடுகளுக்கு நாங்கள் முழு பாதுகாப்பு அளிப்போம்.
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. மேலும் அந்நாட்டு வங்கிகளான விடிபி உள்ளிட்ட 4 வங்கிகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக உலகம் ஒன்று பட்டுள்ளதாக, ரூ்யாவிடம் இருந்த எந்த சைபர் தாக்குதல்கள் நடந்தாலும் அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருக்கிறோம். அவர் முன்னாள் சோவியத் யூனியனை மீண்டும் நிறுவ விரும்புகிறார். அவரது இந்த லட்சிய போக்கு, உலக நாடுகளுக்கு முற்றிலும் எதிரானது என்று நான் நினைக்கிறேன் என ஜோ பைடன் ரெிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவுடன், இந்தியா இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த பைடன், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.