உக்ரைனுகுள் நுழைந்து ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருவதால் தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுகுள் நுழைந்து ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருவதால் தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷ்யா, இன்று அதிகாலை போரை தொடங்கியது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா இணையவழி தாக்குதலையும் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. கிழக்கு உக்ரைன் பகுதிகள் முழுவதிலும் வெடி குண்டுகள் மழை பொழிகிறது என்றே சொல்லலாம். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியிருக்கும் நிலையில், ரஷ்யாவிடம் சரண் அடைய மாட்டோம் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்பது அனைவரும் எதிர்ப்பார்த்த ஒன்று. போர் பதற்றம் என ஒரு மாதத்துக்கும் மேலாக ஊடகங்களில் செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. தொடர்ந்து உக்ரைன் எல்லைகளில் படைகளை குவித்து கடந்த ஒரு மாத காலமாக எச்சரித்து வந்த ரஷியா, இன்று அதிகாலையில் போரை தொடங்கியது. இந்த நிலையில் உக்ரைனுகுள் நுழைந்து ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருவதால் தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.
அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியது. இதையடுத்து, பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் போனில் பேசினார். பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் இது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார். இந்நிலையில், உக்ரைனுகுள் நுழைந்து ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருவதால் தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரில் இந்திய தூதரகம் அருகில் பள்ளி மாணவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் நாட்டு தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.