ஜப்பானிய ரசிகர் ஒருவர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை காமிக் புத்தகமாக தயரித்து அசத்தியுள்ளார்.
ஜப்பானிய ரசிகர் ஒருவர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை காமிக் புத்தகமாக தயரித்து அசத்தியுள்ளார். ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப்ஸ் விருதுகளை வென்ற பிறகு, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. நடனக் குழுக்கள் முதல் வெளிநாட்டு தூதர்கள் வரை அனைவரும் திரைப்படம் மற்றும் அதன் சூப்பர்ஹிட் நடன பாடலான நாட்டு நாட்டு பாடலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜப்பானிய ரசிகர் ஒருவர் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை காமிக் புத்தகமாக தயரித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: உலகில் திவாலாகும் வங்கிகள்; என்னவாகும் இந்திய வங்கிகளின் நிலைமை? அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?
undefined
இதுக்குறித்து ROAR OF RRR (ssrrrmovie) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் குறித்து விளக்கப்பட்ட அந்த காமிக் புத்தகத்தைப் புரட்டி காட்டுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் கேம்சனில், இந்த புத்தக்கத்தை ஜப்பானை சேர்ந்த ஒரு பெண் தன் மகனுக்காக உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வசனங்களுடன் கூடிய 3 மணி நேர படத்தை பார்ப்பது என் மகனுக்கு கடினமாக இருக்கும்.
இதையும் படிங்க: மார்க் ஜுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதிக்கு பிறந்தது மூன்றாவது மகள்... பெயர் என்ன தெரியுமா?
அதனால் அவருக்காக இந்த காமிக் புத்தகத்தை செய்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ 71,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. இது குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர், ஜப்பானியர்களுக்கு எனது மரியாதை. ஃபேன்சிசத்தில் கூட அப்படி ஒரு வகையை காட்டுகிறார்கள் என்றார். மற்றொருவர், மிகவும் அழகானது மற்றும் நிறைய கடின உழைப்பு மற்றும் RRR மீதான காதல் வெளிப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.