வானில் நிகழும் அதிசயம்! - நிலவின் பின்னால் மறையும் வெள்ளி! - அழகாக தோன்றும் பிறை நிலா!

By Asianet Tamil  |  First Published Mar 24, 2023, 9:37 PM IST

நிலவின் இருண்ட பாகத்தின் பின்னால் வெள்ளி கோள் மெதுவாக மறைந்து வருவதால் இரண்டும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இதனால் பிறை நாள் எப்போதும் இல்லாமல் மிக அழகாக வானில் காட்சியளிக்கிறது.
 


வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் நிலவுக்கு அருகில் வந்தது. முக்கிய கோள்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக இருப்பதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்வை காண முடியும்.

நிலவின் இருண்ட பாகத்திற்கு பின்னால் வெள்ளி கிரகம் மெதுவாக மறைந்து வருவதால் இரண்டும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. மாலை நேர வானில் உள்ள பிரகாசமான கோள்களி்ல் ஒன்று வெள்ளி என்றாலும், நிலவின் பின்னால் ஒளிவதால் அதன் பிரகாசம் மேலும் 250 மடங்கு உயர்த்தி அழகாக காட்சியளிக்கிறது.

Tap to resize

Latest Videos

மேலும், இதுவரை நடந்திராத அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்று அடுத்த வாரம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், யுரேனஸ் ஆகிய 5 கோள்களும் பூமிக்கு அருகில் வரும் அரிய நிகழ்வு வானியல் தோன்ற உள்ளது. வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் அரேங்கேறும் கிரங்களின் அபூர்வ நடனம்... சந்திரனுடன் இணையும் 2 கிரகங்கள்... இன்று மாலை காண தவறாதீர்கள்

அந்த 5 கோள்களும், வில் வடிவத்தில் நமது கண்களுக்கு தென்படும் என்றும், புதன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை மட்டும் தொலைநோக்கி கொண்டு பார்க்கலாம் எனவும் வானியல் ஆய்வளார்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிய வானியல் நிகழ்வு மார்ச் 28ம் தேதி நடந்தாலும், மேற்கு வானத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, அந்த நிகழ்வை அதற்கு முன் தினம் மற்றும் அடுத்த நாளும் வானத்தில் தெரியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!