மார்க் ஜுக்கர்பெர்க் - பிரிசில்லா சான் தம்பதிக்கு பிறந்தது மூன்றாவது மகள்... பெயர் என்ன தெரியுமா?

Published : Mar 25, 2023, 12:23 AM IST
மார்க் ஜுக்கர்பெர்க்  - பிரிசில்லா சான் தம்பதிக்கு பிறந்தது மூன்றாவது மகள்... பெயர் என்ன தெரியுமா?

சுருக்கம்

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் ஆகியோர் தங்களுக்கு மூன்றாவது மகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். 

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் ஆகியோர் தங்களுக்கு மூன்றாவது மகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். 38 வயதான தொழிலதிபர், செப்டம்பர் 2022 இல் தனது 38 வயதான மனைவியின் கர்ப்பத்தை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். கடந்த 2003 முதல் டேட் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் 2012 இல் திருமண வாழக்கையில் இணைந்தனர்.

இதையும் படிங்க: உலகில் திவாலாகும் வங்கிகள்; என்னவாகும் இந்திய வங்கிகளின் நிலைமை? அமெரிக்காவின் எதிர்காலம் என்ன?

பிரிசில்லா சான், மார்க் ஸூகர்பெர்க் உடன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவி. மார்க் ஸூகர்பெர்க், ஃபேஸ்புக்கை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர். தற்போது இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

இதையும் படிங்க: வானில் நிகழும் அதியம்! - நிலவின் பின்னால் மறையும் வெள்ளி! - அழகாக தோன்றும் பிறை நிலா!

இந்த நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் ஆகியோர் தங்களுக்கு மூன்றாவது மகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். இதுக்குறித்த அவர்களது பேஸ்புக் பதிவில் ஆரேலியா சான் ஜுக்கர்பெர்க்கை உலகிற்கு வரவேற்கிறோம், நீங்கள் ஒரு சிறிய ஆசீர்வாதம் என்று தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
விண்வெளியில் பீரியட்ஸ் சமாளிப்பது எப்படி? வீராங்கனைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நாசா!