பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசியவர் உடனடியாக பிடிப்பட்டார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி நடத்தப்பட்ட் பைப் குண்டு தாக்குதலில் அவர் நூலிழையில் தப்பியுள்ளார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. பிரதமரை நோக்கி குண்டு வீசியவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு ஜப்பானின் வகயாமாவில் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்திக்கொண்டி சமயத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதையடுத்து, வகாயாமாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து அபானீஸ் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
Japan's Prime Minister, Fumio Kishida, was evacuated without harm after an explosion was heard just before his speech. Visuals from Japan's NHK:pic.twitter.com/MP2qc7ygUW
— Sidhant Sibal (@sidhant)ஆனால் அவர் சம்பவத்தில் காயமடையவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குண்டுவீசிய நபரை அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து உடனடியாக கைது செய்துவிட்டனர்.
BREAKING 🚨 Japan’s Prime Minister evacuated after blast at speech in Wakayama, local media reports pic.twitter.com/AHJppKI16m
— Insider Paper (@TheInsiderPaper)அந்நாட்டின் செய்தி நிறுனவங்கள் "புகை குண்டு" வீசப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. குண்டு வீசப்பட்ட இடத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவோ வேறு சேதங்கள் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் எதுவும் இல்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரச்சார நிகழ்வில் பேசிக்கொண்டிருந்த அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின் ஜப்பான் அரசு பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இருப்பினும் மீண்டும் அந்நாட்டு பிரதமர் மீது குண்டுவீச்சு தாக்குதல் நடந்திருக்கிறது.
ஜி7 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் வரும் மே மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் ஜப்பான் பிரதமர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புதிய உச்சம்! 50,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 20 பேர் மரணம்